UAE Tamil Web

துபாய் மற்றும் அஜ்மானை தொடர்ந்து ஷார்ஜாவிலும் இப்தார் டெண்டுகளுக்கான உரிமம் ரத்து..!

ifthar

கொரோனா தொற்று பரவிவரும் இந்த சூழ்நிலையில் சமூகத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வரவிருக்கும் ரமலானையொட்டி துபாய் மற்றும் அஜ்மானை தொடர்ந்து ஷார்ஜாவிலும் அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு பல கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.

அதில் குடும்பம் அல்லது நிறுவனங்களுக்கான இப்தார் டெண்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இப்தாரை முன்னிட்டு இப்தார் விருந்துகளுக்காக பொதுக்கூட்டம் கூடுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, உணவகங்களுக்கு முன் பகுதியிலோ, வீடுகளுக்கு முன் பகுதியிலோ, மசூதியின் முன்பகுதியிலோ, வாகனங்களுக்கு முன்பாகவோ, அல்லது கூட்டமாகவோ இப்தார் உணவு வழங்குதல் போன்ற செயல்களும் தடை செய்யப்பட்டுள்ளது.

இப்தார் இலவச உணவு வழங்குதற்கான விளம்பரங்களை வெளியிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

வறுமையில் இருக்கும் குடும்பங்களுக்கு உணவு வினியோகம் செய்வதற்கும் அல்லது உதவிகளை செய்வதற்கும் ஷார்ஜா எமிரேட்டில் அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனங்கள் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும் என்று அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இது மட்டுமின்றி ரமலான் நேரத்தில் ஆய்வு மற்றும் கண்காணிப்புகளுக்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஏதேனும் விதிமீறல் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் 901 என்ற எண்ணை அழைப்பதன் மூலமாகவோ அல்லது  covid19@shjpolice.gov.ae என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ புகார்களை தெரிவிக்கலாம்.

ifthar
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap