UAE Tamil Web

ஷார்ஜா: புதுப்பிக்கப்பட்ட கொரோனா விதிமுறைகளை வெளியிட்ட அரசு..!

uae,-police,-dubai,-sharjah,-covid-19,-violations

ஷார்ஜா அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் புதுப்பிக்கப்பட்ட கொரோனா விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்களுக்கான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, வீடுகளில் நடைபெறும் திருமணங்களில் அதிகபட்சமாக 50 பேரும் திருமண ஹால்களில் நடக்கும் திருமணங்களில் அதிகபட்சமாக 100 பேரும் கலந்துகொள்ளலாம். பங்கேற்பாளர்கள் கண்டிப்பாக 4 மீட்டர் சமூக இடைவெளியினை கடைபிடித்தல்வேண்டும்.

திருமண டெண்ட்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 200 பேர் இந்த திருமணங்களில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருமணங்கள் அதிகபட்சமாக 4 மணிநேரங்கள் மட்டுமே நடைபெறவேண்டும். வயதானவர்கள், நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கூடாது எனவும் பங்கேற்பாளர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் எனவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல, முகக்கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல் ஆகிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

uae,-police,-dubai,-sharjah,-covid-19,-violations
0 Shares
Share via
Copy link