கொரோனா வைரஸ்: அமீரகத்தில் விசிட் விசா மற்றும் டூரிஸ்ட் விசா காலம் முடிவடைந்துவிட்டால், சட்டபூர்வமாக தங்க ICA நடவடிக்கை.!

Breaking News

கொரோனா வைரஸ் பாதிப்பால் அமீரகத்திலிருந்து மற்ற நாடுகளுக்கு செல்வதற்கான வான் போக்குவரத்து மற்றும் சாலை மார்க்கமாக செல்ல கூடிய எல்லைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால், அமீரகத்திற்கு விசிட் விசா மற்றும் சுற்றுலா விசாவில் வந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் உருவாகியுள்ளது.

அவர்களுக்கு உதவும் வண்ணமாக குடியுரிமைக்கான மத்திய ஆணையம் (Federal Authority for Identity and Citizenship, ICA) வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது; “ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்து விசா காலம் முடிவடைந்த சுற்றுலாவாசிகள் அனைவரும் மேற்கொண்டு நாட்டில் தங்க சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுவார்கள்”. அதற்கான ஒரு குறிப்பிட்ட வழிமுறை வரும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது.

மேலும் ”ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் எடுக்கப்படும் முன்னேற்றத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்றி நடக்க தயாராக உள்ளது” என்றும் ICA தெரிவித்துள்ளது.

Loading...