UAE Tamil Web

முக்கியச் செய்தி: வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் – இரவு நேர ஊரடங்கை அறிவித்தது அபுதாபி அரசு..!

UAE-STERILISATION_

சமூக பாதுகாப்பை உறுதிபடுத்தவும் கொரோனா பரவலைத் தடுக்கவும் அபுதாபியில் மீண்டும் சுத்திகரிப்புப் பணிகள் ஜூலை 19 ஆம் தேதிமுதல் துவங்க இருப்பதாக அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணிவரையில் இப்பணிகள் நடைபெறும் எனவும் இந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நேரங்களில் போதுப்போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட மிகவும் அத்தியாவசிய தேவை ஏற்பட்டாலொழிய மக்கள் வீட்டை விட்டு வெளியே வருதல் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள நேரத்தில் மிகவும் அவசர காரணங்களுக்காக வெளியே செல்வோர் அதற்கான அனுமதியை பெற்றிருத்தல் வேண்டும். அனுமதியைப் பெற www.adpolice.gov.ae என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

UAE-STERILISATION_
0 Shares
Share via
Copy link