UAE Tamil Web

“காரில் 3 பேர் மட்டுமே செல்லவேண்டும்” – தவறினால் 3000 திர்ஹம்ஸ் அபராதம் – மீண்டும் மீண்டும் அறிவுறுத்தும் அமீரக காவல்துறை..!

Sheikh Zayed Road

அமீரகத்தில் தேசிய தடுப்பூசித் திட்டம் மற்றும் கொரோனா பரிசோதனை முயற்சிகளினால் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதனால் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அமீரகத்தில் ஒரு காரில் அதிகபட்சமாக 3 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற விதிமுறை இன்னும் நடைமுறையில் இருப்பதாக தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளது.

இவ்விதிமுறையை மீறுவோருக்கு 3000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என ஆணையம் எச்சரித்துள்ளது. இருப்பினும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதேபோல காரில் ஒரு நபருக்கு அதிகமானோர் இருந்தால் அனைவரும் முகக்கவசம் அணிதல் வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

பெரிய வாகனங்களைப் பொறுத்தவரை, அதாவது வேன் போன்றவைகளில் இரு பயணிகளுக்கு இடையே இரு சீட்கள் காலியாக விடப்படவேண்டும். பயணம் முழுமையும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றவேண்டும். இதில் தவறுபவர்களுக்கும் 3000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் எனவும் ஆணையம் எச்சரித்துள்ளது.