UAE Tamil Web

உலக சுகாதார ஆணையம் அங்கீகரித்த எந்த தடுப்பூசியை எடுத்தவர்களும் அமீரகம் வரலாம்.. வெளிவந்த புதிய அறிவிப்பு..!

Stock-Abu-Dhabi-airport-passengers_

அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) ஆகியவை இணைந்து இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளன. அதில், உலக சுகாதார ஆணையம் (WHO) அங்கீகரித்த ஏதாவது ஒரு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்ளையும் எடுத்துக்கொண்ட அமீரக குடியிருப்பாளர்கள் அமீரகம் திரும்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் மட்டுமே அமீரகத்திற்கு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உலக சுகாதார ஆணையம் அங்கீகரித்த எந்தவொரு தடுப்பூசியை எடுத்தவர்களும் அமீரகம் வர தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவானது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நைஜீரியா, வங்கதேசம், நேபாளம், வியட்நாம், நமீபியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, ஸாம்பியா, உகாண்டா, சியாரா லியோன், லைபீரியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கீழ்க்கண்ட விதிமுறைகளைக் கடைபிடிக்கவேண்டும்.

ICA வின் இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். தேவையான ஒப்புதல்களைப் பெற தடுப்பூசி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவேண்டும்.

அமீரகத்திற்கு வருவதற்கு முன்னர் தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

பயண நேரத்திற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்கவேண்டும். பரிசோதனையானது அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் எடுக்கப்பட வேண்டும். மேலும் சான்றிதழில் QR Code இடம்பெறுதல் வேண்டும்.

விமானம் ஏறுவதற்கு முன்னர், ரேபிட் கொரோனா பரிசோதனையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அமீரகம் வந்ததற்குப் பிறகு 4 & 8 ஆம் நாளில் மீண்டும் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இந்த நடைமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தினால் தடை செய்யப்பட்ட நாடுகளில் 6 மாத காலமாக வசித்துவந்த அமீரக குடியிருப்பாளர்களும் அமீரகம் திரும்ப அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அமீரகம் வந்ததற்குப் பிறகு தங்களது விசா நிலையை மாற்றிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத மக்களுக்கு முன்னர் விதிக்கப்பட்ட நடைமுறைகளே பின்பற்றப்படும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Stock-Abu-Dhabi-airport-passengers_
4 Shares
Share via
Copy link
Powered by Social Snap