அபுதாபியில் வரும் ஜனவரி 3, 2022 ஆம் தேதிமுதல் இரண்டாவது செமஸ்டர் துவங்க இருக்கிறது. இந்நிலையில் அபுதாபி முழுவதிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களும் இரண்டு வாரங்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்துமாறு கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் நடத்திய வாரந்திர பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாக அதிகாரிகள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மாணவர்கள் 96 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு Alhosn அப்ளிகேஷன் கிரீன் ஸ்டேட்டஸ் விதிகள் பொருந்தும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேவைகளுக்கு ஏற்ப அந்தந்த எமிரேட்டில் உள்ள அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் இந்த விதிமுறைகளை மாற்றவோ புதுப்பிக்கவோ செய்யும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
.@KHDA: Regular face-to-face education in Dubai private schools will continue in the 2nd semester while collective classroom & extracurricular activities will be discontinued. Canteens will close for the first 2 weeks of the semester & gatherings & school trips will be suspended. pic.twitter.com/u6vGNZezJy
— Dubai Media Office (@DXBMediaOffice) December 28, 2021
துபாயில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல நேரடி வகுப்புகளை ஜனவரி 3 ஆம் தேதிமுதல் நடத்தும் என கல்வியறிவுத்துறை அறிவித்துள்ளது. மற்ற அனைத்து எமிரேட்களில் உள்ள பள்ளிகளும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த இருக்கின்றன.
