UAE Tamil Web

UAE : உணவகங்கள், ஷாப்பிங் மால்களில் அதிகளவில் மக்களை அனுமதிக்க அரசு ஒப்புதல்..!

SHOPPING

உணவகங்கள், தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களில் 80 சதவீத மக்களை அனுமதிக்க அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) ஒப்புதல் அளித்துள்ளது.

ஹோட்டல்கள் தங்களது முழு திறனுடன் இயங்கலாம்; இருப்பினும் கொரோனா விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்கவேண்டும்.

ரெஸ்டாரன்ட் மற்றும் கபேக்களில் ஒரு டேபிளில் 10 பேர் அமரலாம். டேபிளை விட்டு வெளியேறினால் கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும்.

நிகழ்ச்சிகள் 60% மக்களுடன் இயங்கலாம். சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அவசியம்.

பொதுப் போக்குவரத்தில் 75% மக்கள் அனுமதிக்கலாம்.

திருமண நிகழ்ச்சிகளில் 60% மக்களை அனுமதிக்கலாம். ஆனால், மொத்த விருந்தினர்களின் எண்ணிக்கை 300 க்குள் மிகாமல் இருக்கவேண்டும்.

நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகளில் பங்கேற்க தடுப்பூசி எடுத்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். குறைந்தபட்சம் 6 மாத காலத்திற்குள் இரண்டாவது டோசை எடுத்திருக்கவேண்டும்,

இதுவே, நாட்பட்ட நோயாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு 3 மாத காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SHOPPING
1 Share
Share via
Copy link