UAE Tamil Web

அமீரகம்: மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது அரசு..!

MODERNA

மாடர்னா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகிக்க அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அமீரகத்தில் நடத்தப்பட்ட தர ஆய்வுகள் மற்றும் பாதுகாப்பு சோதனைகளில் மாடர்னா தடுப்பூசி கொரோனா வைரசிற்கு எதிராக ஆண்டிபாடிகளை உருவாக்குவது நிரூபணம் ஆகியுள்ளதையடுத்து இந்த முடிவினை அமீரக அரசு எடுத்துள்ளது.

மேலும் இந்த மருந்தினை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஆணையமும் (FDA) அங்கீகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்துப் பேசிய சுகாதார ஒழுங்குமுறை துறையின் உதவி துணை செயலாளர் டாக்டர் அமீன் ஹுசைன் அல் அமிரி,” அமீரக அரசின் நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளை மாடர்னா தடுப்பூசி பூர்த்திசெய்கிறது. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டிற்கான உலகளாவிய தரத்தினை தடுப்பூசி கொண்டுள்ளது” என்றார்.

உள்ளூர் சுகாதார அமைப்புகள் ஏற்றுமதி குறித்த பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில் இந்தத் தடுப்பூசியை இறக்குமதி செய்ய இருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

FDA அளித்த ஆய்வு முடிவுகளின்படி தடுப்பூசி கொரோனா வைரசிற்கு எதிராக ஆண்டிபாடிகளை உருவாக்குவது தெளிவாகியுள்ளது என அமிரி தெரிவித்தார்.

மாடர்னா தடுப்பூசி mRNA-1273 என்றும் அழைக்கப்படுகிறது. mRNA முறையைப் பயன்படுத்தி கொரோனாவிற்கு எதிரான ஆண்டிபாடிகளை உருவாக்குவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

MODERNA
0 Shares
Share via
Copy link