UAE Tamil Web

அமீரகம்: AlHosn அப்ளிகேஷனில் புதிய மாற்றங்களை அறிவித்த அரசு..! – கிரீன் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் சலுகைகள்..!

Green Pass

கொரோனா குறித்த தகவல் பதிவு அப்ளிகேஷனான அல்ஹோஸ்ன் -ல் கிரீன் பாஸ் வைத்திருப்பவர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட நடைமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தனிப்பட்ட நபர்களின் தேவைகள் மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்து பெடரல் மற்றும் உள்ளூர் அரசு எளிதில் தெரிந்துகொள்ள முடியும் என அமீரக சுகாதாரத்துறை மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமீரக குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளின் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல PCR பரிசோதனை எடுத்துக்கொண்ட நபர்களின் முடிவுகளை வெளியிட அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் புதிய கலர் கோடிங்குகள் (colour-coding) பயன்படுத்தப்பட இருக்கின்றன.

இவற்றில் ஆறு பிரிவுகள் உள்ளன. அவை,

  • முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள்.
  • இரண்டாவது டோஸ் பெறுநர்கள்.
  • முதல் டோசைப் பெற்று இரண்டாவது டோஸ்-காக காத்திருப்பவர்கள்.
  • நிர்ணயிக்கப்பட்ட தேதியைக் கடந்தும் இரண்டாவது டோசை எடுத்துக்கொள்ளாமல் தாமதம் செய்பவர்கள்.
  • தடுப்பூசி பெறுவதிலிருந்து விலக்குப் பெற்றவர்கள்.
  • தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள்.

முழுவதும் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள்:

குறைந்தது 28 நாட்களுக்கு முன்னதாகவே இரண்டாவது டோஸைப் பெற்றவர்கள் அல்லது தடுப்பூசி சோதனைகளில் தன்னார்வலர்களாக உள்ளவர்கள் இவர்கள். அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் இவர்களுடைய PCR பரிசோதனை முடிவானது 30 நாட்களுக்கு பச்சை நிறமாகவும், ஆக்டிவ் ஐகானை (E எழுத்து அல்லது கோல்டன் ஸ்டார்) ஏழு நாட்களுக்கும் காண்பிக்கும்.

28 நாட்களுக்கு முன்னர் இரண்டாவது டோசைப் பெற்றவர்கள்: அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் இவர்களுடைய PCR பரிசோதனை முடிவானது 14 நாட்களுக்கு பச்சை நிறத்தில் தோன்றும்.

முதல் டோஸை மட்டுமே பெற்றவர்கள்: இரண்டாவது டோஸ் பெறுவதற்காக காத்திருப்பவர்களுக்கு அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் இவர்களுடைய PCR பரிசோதனை முடிவானது ஏழு நாட்களுக்கு பச்சை நிறத்தில் தோன்றும்.

இரண்டாவது டோஸுக்கு தாமதமாக வருபவர்கள்: முதல் டோஸைப் பெற்றவர்கள் மற்றும் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள 48 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தாமதம் செய்பவர்களுக்கு, அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் இவர்களுடைய PCR பரிசோதனை முடிவானது மூன்று நாட்களுக்கு பச்சை நிறத்தில் தோன்றும்.

தடுப்பூசி எடுப்பதில் இருந்து விலக்கு பெற்றவர்கள்: அங்கீகரிக்கப்பட்ட செயல்முறைகளின்படி தடுப்பூசி விலக்கு சான்றிதழ்களை வைத்திருப்பவர்களுக்கு, அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் இவர்களுடைய PCR பரிசோதனை முடிவானது, ஏழு நாட்களுக்கு பச்சை நிறத்தில் தோன்றும்.

தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள்: தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் இருந்து விலக்குப் பெறாமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தவறியவர்களின் PCR பரிசோதனை முடிவானது, அல்ஹோஸ்ன்-ல் மூன்று நாட்களுக்கு பச்சை நிறத்தில் தோன்றும்.

மேற்கண்ட எல்லா வகைகளுக்கும், தொடர்புடைய பி.சி.ஆர் சோதனை செல்லுபடியாகும் நாட்கள் முடிவடைந்தால் அல்ஹோஸ்ன் நிலை சாம்பல் நிறமாக (grey) மாறும். சோதனை முடிவு பாசிட்டிவாக இருக்கும்போது நிலை சிவப்பு நிறமாக மாறும். வழக்கமான அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Green Pass
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap