UAE Tamil Web

உலகிலேயே அதிக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடாக மாறியது அமீரகம்..!

vaccine

அதிக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலை ப்ளூம்பெர்க் தடுப்பூசி கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் முதலிடம் வகிக்கும் அமீரகம் தனது மக்கட்தொகையில் 72.1 சதவீதமானோருக்கு தடுப்பூசியினை செலுத்தியுள்ளது.

100,000 பேருக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நாடான ஷீசெல்லெஸ் இந்தப் பட்டியலில் 2 ஆம் இடம் வகிக்கிறது. அந்நாடு தனது மக்களில் 71.7 சதவீதமானோருக்கு தடுப்பூசியை வழங்கியிருக்கிறது.

அமீரகத்தில் கீழ்க்கண்ட நான்கு தடுப்பூசிகள் தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றன.

  1. சினோபார்ம்
  2. பைசர் பையோஎன்டெக்
  3. ஸ்புட்னிக் வி
  4. ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ரா ஜெனக்கா

அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் சமீபத்தில் மாடர்னா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தகுதியுள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு அமீரக அரசு தடுப்பூசிகளை இலவசமாக அளித்துவருவது குறிப்பிடத்தக்கது.

vaccine
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap