34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

யார் முககவசம் அணிய வேண்டும்? எப்போது அணிய வேண்டும்? விளக்கும் அமீரக அமைச்சகம்..!

mask

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முககவசம்(face mask) அணிவது பரிந்துரைக்கப்பட்டாலும், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டும் முககவசம்(face mask) கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின்படி, நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும், காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் மட்டுமே முககவசம் அணிவது அவசியம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் நாட்டின் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் புதுப்பித்த உண்மை செய்திகளை தவிர தேவையற்ற வீண் வதந்திகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று அமைச்சகம் கூறியதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.

ஐக்கிய அரபு அமீரக அட்டர்னி ஜெனரல் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறினால் 500 திர்ஹம்ஸ் முதல் 50,000 திர்ஹம்ஸ் வரையிலான அபராத பட்டியலை வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

அதில் மருத்துவ முககவசங்களை திறந்தவெளி அல்லாத மூடிய பகுதிக்குள் அணியாமல் இருந்தாலோ அல்லது பாதுகாப்பான இடைவெளி (social distance) வைத்திருக்கத் தவறினாலோ 1,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து ஒரு மூத்த அரசாங்க அதிகாரி கூறுகையில், அபராதங்களைத் தவிர, பொது மக்கள் அனைவரின் பொறுப்பும், அக்கறையும் தான் நாட்டின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் என்று கூறியதோடு, யாருக்காவது நாள்பட்ட நோய் அல்லது சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், அவர்கள் கண்டிப்பாக மருத்துவ முககவசங்களை அணிய வேண்டும். மேலும் மக்கள் வெளியில் செல்வது அவசியம் இல்லை என்றால் அவர்கள் வீட்டிலேயே இருப்பது முக்கியம் என்றார்.

மேலும் அவர் கூறும்போது, அண்மையில் வெளியிட்ட தீர்மானம் மற்றும் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகம் எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை மக்களை பயமுறுத்துவதை நோக்கமாகக் கொண்டவை அல்ல. மாறாக தொற்றுநோயின் தீவிரம் குறித்து பொது மக்களுக்கு தெரிவிக்க கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறியதற்காக மக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தாலும், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரிவர பின்பற்றுவதின் மூலம் முதலில் அவர்களின் ஆரோக்கியத்தையும், சமூகத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியம்” என்று அந்த அதிகாரி கூறினார்.

இதையும் படிங்க.!