UAE Tamil Web

அமீரகத்தில் முதல் ஒமைக்ரான் வைரஸ் பதிவு – எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதாரத்துறை வலியுறுத்தல்..!

Abu Dhabi Covid 19 Screening Center

அமீரகத்தில் முதல் கொரோனா ஒமைக்ரான் வைரஸ் தாக்குதல் பதிவாகியிருகியிருப்பதாக அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அமீரக வழியாகப் பயணித்த அந்நபர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆப்பிரிக்க நாடுகளில் பரவிவரும் ஒமைக்ரான் வைரஸ் காரணமாக குறிப்பிட்ட 7 நாடுகளில் இருந்து அமீரகம் வர தடை விதிப்பதாக அமீரக அரசு தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமீரக சுகாதராத் துறையின் செய்தித் தொடர்பாளர் டாக்டர். ஃபரிதா அல் ஹோசாணி,” உலக சுகாதார மையம் கூறியுள்ளபடி  உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து வல்லுனர்கள் குழு ஆராய்ந்து வருகிறது. முந்தைய கொரோனா திரிபுகளை விட இந்த வகை வேகமாக பரவக் கூடியது. இருப்பினும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும். மேலும் பொதுமக்கள் சூழலின் தன்மையை அறிந்து எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap