UAE Tamil Web

இந்தியாவைத் தொடர்ந்து இலங்கை உள்ளிட்ட அதன் அண்டை நாடுகளில் இருந்தும் பயணிகள் அமீரகம் வரத் தடை – எந்தெந்த நாடுகள்..!

2020_dubai_international_airport

அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் சமீபத்தில் இந்தியாவில் இருந்து பயணிகள் அமீரகம் வரத் தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளான ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து தேசிய மற்றும் சர்வதேச பயணிகள் விமானங்கள் அமீரகம் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மே 12 இரவு 11.59 மணிமுதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. இருப்பினும் அமீரகம் வழியாக இந்த நாடுகளுக்குச் செல்பவர்கள் (டிரான்ஸிட்) தங்களது பயணங்களை மேற்கொள்ளலாம்.

அமீரக குடிமக்கள், டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், அரசு உயர் அதிகாரிகள், வணிக விமானங்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் கோல்டன் ரெசிடன்ஸி விசா வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு இந்தத் தடையில் விலக்கு உண்டு.

மேற்கண்ட நபர்கள் தங்களது பயண நேரத்திற்கு முன்பான 48 மணிநேரத்திற்குள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்கவேண்டும். அதில் QR Code இருத்தல் வேண்டும்.

மேலும், 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுதல், அமீரகம் வந்தவுடன் PCR பரிசோதனை எடுத்துக்கொள்தல், அமீரகத்திற்குள் நுழைந்த 4 மற்றும் 8 வது நாள் மீண்டும் PCR பரிசோதனை எடுத்துக்கொள்தல் ஆகிய கொரோனா விதிமுறைகளை சமரசமின்றி இவர்கள் கடைபிடிக்கவேண்டும்.

சரக்குப் போக்குவரத்து விமானங்கள் வழக்கம்போல இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020_dubai_international_airport
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap