UAE Tamil Web

முக்கியச் செய்தி: மீண்டும் செயல்படத் துவங்கிய Alhosn அப்ளிகேஷன்..!

alhosn

தொழில்நுட்ப கோளாறு காராணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர், Alhosn அப்ளிகேஷனை பல பயனர்களால் உபயோகிக்கமுடியாமல் போனது. கொரோனா பரிசோதனை முடிவுகள் மற்றும் அதன் செல்லுபடியாகும் காலத்தினைத் தெரிந்துகொள்ள உதவும் Alhosn அப்ளிகேஷன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதாக தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்தது.

இதனை சரிசெய்ய, வல்லுனர்கள் முயற்சித்து வருவதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. அப்ளிகேஷன் முடக்கத்தால் அபுதாபியில் பொது இடங்களுக்குச் செல்ல Alhosn அப்ளிகேஷனில் கிரீன் பாஸ் இருத்தல் வேண்டும் என்ற நடைமுறையை தற்காலிகமாக அரசு தடை செய்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

இதன் காரணமாக அபுதாபிக்குள் நுழைபவர்கள் மற்றும் பொது இடங்களுக்குச் செல்பவர்கள் கொரோனா பரிசோதனை எடுத்த SMS ஐ காட்டலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் Alhosn அப்ளிகேஷனில் உள்ள தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மால்கள் மற்றும் சூப்பர்மார்கேட்களின் மேலாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை ஏதும் அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிரீன் பாஸ் திட்டம் மீண்டும் அமலுக்கு வர இருப்பதால் இனிமேல் கொரோனா பரிசோதனை எடுத்ததற்கான SMS மற்றும் தடுப்பூசி எடுத்துக்கொண்டதர்கான சான்றுகளை தனித்தனியாக சமர்ப்பிக்கவேண்டிய தேவை மக்களுக்கு இருக்காது.

alhosn
0 Shares
Share via
Copy link