UAE Tamil Web

கொரோனா தடுப்பூசி எடுக்க செல்பவர்களுக்கு இலவச பயணம் – ஊபர் அறிவிப்பு..!

Uber-app-

பிரபல வாடகைப் போக்குவரத்து நிறுவனமான ஊபர், துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளச் செல்கையில் ஊபர் மூலமாக இலவசமாக பயணிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

அமீரக அரசின் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் இந்தத் திட்டத்தை துவங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 60 திர்ஹம்ஸ் மதிப்புள்ள இரண்டு பயணங்களுக்கு ஊபர் வவுச்சர் அளிக்கிறது. இதன்மூலமாக நீங்கள் இலவசமாக பயணிக்கலாம்.

ஜூன் 22 ஆம் தேதிமுதல் ஜூலை 31 ஆம் தேதிமுதல் இந்த இலவச பயணத் திட்டம் நடைமுறையில் இருக்கும் எனவும் துபாய், அபுதாபில் வசிக்கும் அனைத்து நாட்டினரும், அனைத்து வயதினரும் இந்த திட்டத்தின் மூலம் பலனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் மற்றும் அபுதாபி ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் ஆகியவற்றின் முழு ஒத்துழைப்புடன் இந்த திட்டத்தை துவங்கியுள்ளதாக ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

துபாய் மற்றும் அபுதாபியில் இயங்கும் 97 தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல ஊபர் சேவைகளை இலவசமாக பயன்படுத்தலாம். துபாய் சுகாதார ஆணையம் மற்றும் Seha வின் கட்டுப்பாட்டில் இயங்கும் மற்றும் பிற மையங்களும் இந்தப் பட்டியலில் அடக்கம்.

எப்படி புக் செய்வது?

  • SMS அல்லது மின்னஞ்சல் வாயிலாக பெறப்பட்ட ஊபர் லிங்கை (URL) கிளிக் செய்யவும்.
  • Accept voucher என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • வவுச்சர் குறித்த செய்திகள் திரையில் தோன்றும் (செல்லுபடியாகும் தேதி, தடை செய்யப்பட்ட பயணங்கள் குறித்த பட்டியல்.. முதலியவை)
  • இப்போது உங்களுடைய ஊபர் வாலட்டில் வவுச்சர் ஏறிவிடும்.
  • உங்களுடைய பிக்-அப் மற்றும் டிராப் இடத்தை உள்ளீடு செய்யவும். வேறு நபருக்கும் உங்களால் புக் செய்ய முடியும். முக்கியமாக பயணம் துவங்கும் மற்றும் முடியும் இடம் தடுப்பூசி மையமாக இருத்தல் வேண்டும்.

 நன்மைக்காக டெக்னாலஜியை பயன்படுத்துவோம்

அமீரகத்திற்கான ஊபர் நிறுவனத்தின் பொது மேலாளர் ரிஃபாத் மஹாஸ்னே இதுகுறித்துப் பேசுகையில்,“சமூகத்திற்கு தடுப்பூசி போடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறோம். தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, சமூகங்களை எவ்வாறு ஆதரிப்பது, அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும் நேரத்தில் நகரங்களை எவ்வாறு இணைப்பது என்பது குறித்து நாங்கள் பார்த்து வருகிறோம். மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டோம். இது நிச்சயம் அரசின் குறிக்கோளை எட்ட உதவி செய்யும் ” என்றார்.

Uber-app-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap