UAE Tamil Web

துபாயில் கோவிட் தடுப்பூசி மையம் நாளை முதல் மூடப்படுவதாக அறிவிப்பு!

துபாயில் உள்ள கோவிட் தடுப்பூசி மையம் நாளை முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய், அல்பைத் மெத்வாஹித் அல் வர்காவில் அமைந்துள்ள கோவிட்-19 தடுப்பூசி மையம் மார்ச் 17 நாளை முதல் மூடப்படவுள்ளதாக துபாய் சுகாதார ஆணையமான DHA ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி மையத்தில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு புதிய இடத்தின் விவரங்களுடன் மெசேஜ் செய்வதாக அறிவித்துள்ளது.

உலகிலேயே தடுப்பூசி செலுத்திய விகிதத்தில் அமீரகம் உயர்ந்துள்ளது. மார்ச் 16 ஆம் தேதியான நேற்றைய நிலவரப்படி, குடியிருப்பாளர்களில் 97 சதவீதத்தினர் கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap