UAE Tamil Web

ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களில் இந்த கொரோனா தடுப்பூசி மையங்கள் இயங்காது – சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு..!

CoronaVaccine

துபாய் முழுவதும் உள்ள தடுப்பூசி மையங்களில் துபாய் சுகாதார ஆணையத்தின் (DHA) கட்டுப்பாட்டில் இயங்கும் ஒன் சென்ட்ரல், அல் பார்ஷா ஹால் மற்றும் அல் துவாரில் உள்ள டயாலிஸிஸ் மையம் ஆகியவை ஈத் அல் பித்ர் விடுமுறையின்போது மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அல் படா, அல் கவனீஜ் மற்றும் துபாய் நகராட்சியில் உள்ள DHA வின் கட்டுப்பாட்டில் இயங்கும் கொரோனா பரிசோதனை நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் ரஷீத், லத்தீஃபா மற்றும் துபாய் மருத்துவமனையின் வெளிநோயாளிகளுக்கான பிரிவு மே 12 – 14 ஆகிய தேதிகளில் மூடப்படும்.

ஷிப்ட் அடிப்படையில் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் தொடர்ந்து இயங்கும் எனவும் DHA விற்குச் சொந்தமான மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவு தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ உடற்பயிற்சி மையங்கள்

மெடிக்கல் ஃபிட்னஸ் செண்டர் எனப்படும் மருத்துவ உடற்பயிற்சி மையங்கள் ஈத் அல் பித்ர் விடுமுறை தினங்களில் மூடப்படும் அதேவேளையில் முஹைஸ்னா உடற்பயிற்சி மையம் மே 11 செவ்வாய்க்கிழமை காலை 8 மனிமுதல் மதியம் 1 மணிவரையில் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மை சுகாதார மையங்கள்

நாத் அல் ஹமர், அல் பார்ஷா, ஏர்போர்ட் மெடிக்கல் சென்டர் முழுநேரமும் இயங்கும் எனவும் DHA வின் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற முதன்மை சுகாதார மையங்கள் விடுமுறை நாளில் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.