அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தினைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது அமீரகத்தில் உள்ள 18 வயதிற்குக் குறைவான குழந்தைகள் அனைவரும் உடனடியாக பூஸ்டர் டோசினை எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை எடுத்துக்கொண்டு 6 மாதத்தினைக் கடந்த நபர்கள் பூஸ்டர் டோசினை எடுத்தக்கொள்ள தகுதிவாய்ந்தவர்கள் என அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆய்வு முடிவகளின் படி, கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோசினை எடுத்துக்கொண்டவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் விகிதம் மிகக்குறைவு எனவும் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் கொரோனாவால் ஏற்படும் மரணம் மிகக்குறைவு எனவும் அதிகாரிகள் பத்திரிகையாளர் சந்திப்பின்போது சுட்டிக்காட்டினர்.
Health Sector: Studies have shown vaccines, and booster shots can significantly reduce the disease’s effects and prevent variants.#TogetherWeRecover pic.twitter.com/Cpk4kz37u7
— NCEMA UAE (@NCEMAUAE) December 21, 2021
இதுபற்றிப் பேசிய அமீரக சுகாதாரத்துறையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர். நோரா அல் காய்தி,” கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை எடுத்துக்கொண்டு ஆறு மாதங்களைக் கடந்த 18 வயதிற்குக் குறைவான குழந்தைகள் அனைவரும் உடனடியாக பூஸ்டர் டோசினை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.