UAE Tamil Web

உலகிலேயே 100% கொரோனா தடுப்பூசியின் சிங்கிள் டோஸ் செலுத்திய நாடாக மாறியது அமீரகம்..!

sheikh-mohammed-receives-covid-19-vaccine

கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி. மனித வரலாற்றை, அதன் வளர்ச்சியை 100 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் சென்றிருக்கிறது என்றே சொல்லலாம். கொத்துக்கொத்தாக மக்கள் செத்து மடிய, உலக ஆராய்ச்சியாளர்கள் மனித இனத்திற்கு எதிரான இப்போரில் களமாடினார்கள்.

தங்களது நாட்டில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு முழு உதவியையும் செய்ய பல நாடுகள் தயாராக இருந்தன. அதில் முக்கியமானது அமீரகம். சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை ஆய்வுக்கு உட்படுத்த மாபெரும் பொருட்செலவில் ஆய்வகத்தை அபுதாபியில் தயார் செய்தது அமீரகம். சுமார் 31 ஆயிரம் பேர் இந்த தடுப்பூசி ஆராய்ச்சியில் தன்னார்வலர்களாக கலந்துகொண்டனர்.

அதன் பின்னர், பைசர், ஆஸ்ட்ரா ஜெனக்கா, ஸ்புட்னிக் என உலக சுகாதார மையம் அங்கீகரித்த அனைத்து தடுப்பூசிகளையும் இறக்குமதி செய்து மக்களுக்கு இலவச தடுப்பூசி முகாம் மூலம் அளித்தது அமீரக அரசு.

கொரோனா தடுப்பூசியை அரச குடும்ப உறுப்பினர்களே செலுத்திக்கொண்டு இந்த சமுதாயத்திற்கு சிறந்த முன்னோடிகள் அவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்தார்கள். டிரைவ் த்ரூ செண்டர்கள், வீட்டிற்கே சென்று தடுப்பூசி வழங்கும் திட்டம் என அரசு அனைத்து வகையிலும் தடுப்பூசி பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.

இதன் பலனாக அமீரகத்தில் கொரோனா தடுப்பூசியின் சிங்கிள் டோஸ் எடுத்தவர்களின் எண்ணிக்கை 100% ஆக மாறியிருக்கிறது. இது உலகில் வேறெந்த நாடும் இதுவரையில் செய்யாத சாதனையாகும்.

sheikh-mohammed-receives-covid-19-vaccine
1 Share
Share via
Copy link