UAE Tamil Web

அபுதாபி: இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடையாது – அரசு திட்டவட்டம்..!

vaccination

காலாவதியான ரெசிடென்ஸ் விசா மற்றும் நுழைவு விசா வைத்திருப்பவர்கள் இனி இலவசமாக கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் முன்னர் தெரிவித்திருந்தது. அதன்பின்னர் அபுதாபியில் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் சுற்றுலா, விசிட் விசா வைத்திருப்பவர்கள் இனி இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளிவந்தது.

இந்நிலையில் காலாவதியான ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்கள் மற்றும் நுழைவு அனுமதி வைத்திருப்போருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் எனவும் சுற்றுலா, விசிட் விசா வைத்திருப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது எனவும் அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.

அபுதாபியில் உள்ள அனைவரது பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தைக் காக்கும்பொருட்டு விதிவிலக்கான இந்த கொரோனா சூழ்நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

vaccination
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap