அமீரக கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டுக் கவுன்சிலின் தலைவரும் அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத் துறை அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Abdullah bin Zayed Al Nahyan) நேற்று கல்வித்துறை அதிகாரிகளுடன் காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.
இதன்மூலம் இந்த ஆண்டின் முதற் காலாண்டில் அமீரக மக்கட்தொகையில் பாதிப்பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் அமீரக அரசின் திட்டம் வெற்றிபெரும் என அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், பள்ளிகளை சகஜ நிலைக்குக் கொண்டுவரவும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் உதவும் என அமைச்சர் தெரிவித்தார்.
“சுகாதாரமான பள்ளி வளாகத்திற்கு நம் குழந்தைகள் வருவதை நாம் உறுதிசெய்யவேண்டும்” என அமைச்சர் தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.