UAE Tamil Web

3 உருமாறிய கொரோனா வைரஸ்கள் அமீரகத்தில் கண்டுபிடிப்பு – சுகாதாரத்துறை தகவல்..!

corona

அமீரக சுகாதாரத்துறையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரான டாக்டர். ஃபரீதா ஹோசானி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா வைரசின் உருமாறிய பிரிவுகளான ஆல்பா, பீட்டா மற்றும் டெல்டா ஆகியவை அமீரகத்தில் இருப்பது உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்துப் பேசிய அவர்,” உலகமெங்கிலும் பரவிவரும் உருமாறிய கொரோனா வைரஸ்களான ஆல்பா, பீட்டா மற்றும் டெல்டா ஆகியவை அமீரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்றார்.

தடுப்பூசி பற்றிப் பேசிய அவர்,” கொரோனாவை இந்த தடுப்பூசிகள் முற்றலுமாக தடுக்காது எனினும், தீவிரத்தன்மையை கட்டுப்படுத்துதல், அவசநிலை சிகிச்சையை தவிர்த்தல், உயிரழப்பை குறைத்தல் ஆகியவற்றில் தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுவது ஆய்வுகளின்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார்.

கொரோனா பரிசோதனைகளான PCR, DPI ஆகியவற்றின் முடிவுகளை தெரிந்துகொள்ள உதவும் அல்ஹோசன் (Alhosn) அப்ளிகேஷன் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளதாகவும், மக்கள் தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள 8004676 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கு கால் செய்யலாம் எனவும் ஹோசானி குறிப்பிட்டார்.

corona
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap