UAE Tamil Web

துபாயில் குவாரண்டைன் விதிகளில் அதிரடி மாற்றம் – விவரம் உள்ளே!

கொரோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, துபாய் சுகாதார ஆணையம் DHA தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வரை, கொரோனா தொற்றிலிருந்து யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது. இதனால் ஒவ்வொரு குடியிருப்பாளரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

துபாயில் உங்களுக்கோ/ நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கோ பரிசோதனை செய்யும் போது, பாசிட்டிவ் என முடிவு வந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். DHA வீட்டில் தனிமைப்படுத்த வேண்டியவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

Home-Isolation-2-scaled-e1602186866482

முதலில் எப்போது தனிமைப்படுத்தப்பட வேண்டும்?

நோய் கட்டுப்பாட்டு மையம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி,நோயாளிகளை தனிமைப்படுத்துவதன் மூலம் மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பும் கட்டுப்படுத்துவதுடன், தடுக்கவும் உதவுகிறது. தொடர்பில் இருப்பவருக்கு பின்னாளில் அறிகுறிகள் தோன்றினாலும் வெளியே செல்லாமல், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் குவாரண்டைன் காலம் 10 நாட்களாகும். இது rt PCR டெஸ்ட் ரிப்போர்ட் வந்த நாளிலிருந்து கணக்கிடப்படுகிறது. நோயாளிக்கு 10வது நாளில் காய்ச்சலை குறைக்கும் மருந்து இல்லாமல், தொடர்ந்து 3 நாட்களுக்கு காய்ச்சல் குறைந்தது போன்ற அறிகுறிகள் இருந்தால் குவாரண்டைன் காலம் முடிவடையும்.

DHA வழிகாட்டுதல்கள்

வீட்டில் தனிமைப்படுத்தல் முறை

ஒரே வீட்டில் 2 கொரோனா நோயாளிகள் இருந்தால், அவர்கள் போதுமான இடைவெளியில் தனியறையில் இருக்க வேண்டும். முக்கியமாக குளியலறையும், கழிவறையும் தனி தனியாக இருப்பது அவசியம்.

  • நோய் பரவும் வாய்ப்புகளை குறைக்க எல்லா நேரங்களிலும் மூன்று அடுக்கு முககவசத்தைஅணியுங்கள்
  • தொற்று பரவாமல் தடுக்க உங்கள் கைகளை அடிக்கடி கழுவதோடு மட்டுமல்லாமல், சானிடைசர்களைப் பயன்படுத்தவும்.
  • ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் தட்டை சாப்பிட பயன்படுத்தவும்.
  • தனிமைப்படுத்தபட்டவருக்கு வெளியே உணவை வைக்கும் போது, அவருக்கான உணவை வைப்பவர்கள் பாதுகாப்புக்காக மாஸ்க், கையுறையை அணிய வேண்டும். இதன் மூலம் மற்றவருக்கு பரவுவது தவிர்க்கப்படும். தனிமைப்படுத்தபட்டவருடன் தொடர்பில் இருப்பவர்கள் இதே போன்ற நடைமுறையை கடைபிடிப்பது அவசியம்.
  • நோயாளி துணிகளைத் துவைக்கவும், குளிக்கவும் மூடிய அறைகளை பயன்படுத்த வேண்டும்.

Home-isolationவீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுதல்!

  • வீட்டில் உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வது என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, பொதுவாக 14 நாட்களுக்கு மற்றவர்களுடன் தொடர்பைத் தவிர்ப்பது. ஒரே வீட்டில் வசிப்பவர்கள் மட்டுமே வீட்டில் இருக்க முடியும். நெருங்கிய குடும்பத்தைச் சேராத நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை.
  • கொரோனா அறிகுறிகளுடன்  வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களும் அவர்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
  • எப்பொழுதும் உள்ளூர் சுகாதார அதிகாரிகளுடன் தொடர்பில் இருங்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கும் போது, DHA கண்காணிப்புக் குழு, அவருடைய உறவினர்கள் மூலம் தொலைபேசியில் பேசி நிலைமையை அறிந்துக் கொள்கிறார்கள்.இக்குழு நோயாளியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
  • அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். சானிடைசர்களை பயன்படுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து குறைந்தது 2 மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
  • சோப்பு, தட்டு, சீப்பு, துண்டு என எதையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் தனியாக பயன்படுத்த வேண்டும்.
  • தனி அல்லது பிரிக்கப்பட்ட அறையில் தூங்கவும். அதே போல் தனி கழிப்பறையை பயன்படுத்தவும்.
  • தனிமைப்படுத்தப்பட்டவர் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் வீடியோ கால் அல்லது மற்ற சமூக வலைதளம் மூலம் தொடர்பில் இருக்கலாம்.
  • 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தால் இயல்பு வாழ்க்கைக்கு செல்வது பாதுகாப்பானதுSelf Isolationnnnnn

வீட்டு தனிமைப்படுத்தலின் மூலம் உணர்ச்சி ரீதியாக வலுவாக இருப்பது எப்படி …

  • தினசரி வழக்கத்தை கடைபிடியுங்கள். எப்போதும் நல்லதையே சிந்தியுங்கள். தனிமைப்படுத்தப்பட்ட காலம் விரைவில் கடந்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • சமூக ஊடக சேனல்கள் மூலம் மற்றவர்களுடன் உங்கள் உறவுகளைப் பேணுங்கள். இது நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.
  • வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் குழந்தைகளுடன் விளையாடியும், வீட்டுப் பாடங்களை செய்தும் நேரத்தை செலவழியுங்கள்.
  • வரைதல் மற்றும் வாசிப்பது போன்ற உங்களுக்கு பயனுள்ள விஷயங்களைச் செய்ய இந்தக் காலத்தைப் பயன்படுத்தவும்.

வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கும் போது, ஆரோக்கியமாக இருப்பது எப்படி?

  • குறைந்தபட்ச இயக்கத்துடன், சில கிலோ எடை கூடி விடும்.இதனால், அதிக கலோரி உணவுகளான கேக், சாக்லேட்டுகள், சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்கு தீனிகளை தவிர்க்க வேண்டும்.
  • ஒருவர் உட்கொள்ளும் கலோரிகளை விட அதிக கலோரிகள் இருக்கும்போது எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. இதனால் லேசான மற்றும் குறைந்த கலோரி உணவுகளை உண்ண வேண்டும்.
  • ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.
  • முழு தானியங்கள், அரிசி, பாஸ்தா, புதிய காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட உடலுக்கு ஆற்றலை வழங்கும் உணவுகள் உட்பட நன்கு சமநிலையான உணவை உண்ணுங்கள்.
  • கொய்யா, கிவி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்கள் அதிக நோய் சக்தியை உருவாக்குகின்றன. நட்ஸ், கிரீன் டீ போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும். டெலிவரி ஆப்ஸில் சாத்தியமான அனைத்தையும் கொண்டு, ஆன்லைனில் புதிய தயாரிப்புகளை ஆர்டர் செய்யலாம்.
  • குறிப்பாக குழந்தைகள் முட்டை, இறைச்சி, மீன், பால் பொருட்கள் போன்ற வளர்ச்சியை ஊக்குவிக்கும் உணவுகளை உண்ண வேண்டும்.
  • டுனா மற்றும் மத்தி போன்ற மீன்களை சாப்பிடவும்.
  • வீட்டில் வழக்கமாக செய்யும் உடற்பயிற்சியை மறக்காதீர்கள். ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்படும் உடற்பயிற்சியானது பெரியவர்களுக்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களும், குழந்தைகளுக்கு 60 நிமிடங்களும் ஆகும்.
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap