UAE Tamil Web

அமீரகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம்? – 7 எமிரேட்களிலும் உள்ள இலவச கொரோனா தடுப்பூசி மையங்களின் முகவரி மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள்..!

vaccine

அமீரகத்தில் தற்போது எங்கு நோக்கினும் கொரோனா தடுப்பூசி பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. அனைவருக்கும் கட்டாயமா? யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்? இலவசமா அல்லது பணம் செலுத்த வேண்டுமா? எங்கே சென்று போட்டுக்கொள்வது என நமது இணையதளத்திலும் வாசகர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பவே அவர்களுடைய சந்தேகங்களைத் தீர்க்கவே இந்தப் பதிவு.

- Advertisment -

அமீரக அரசு குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை இந்த இலவச தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தியிருக்கிறது. மேலும், இந்தாண்டின் முதல் காலாண்டிற்குள் அமீரக மக்கட்தொகையில் 50 சதவிகித மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் எனவும் அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. அதேநேரத்தில் கட்டாயம் என்று எந்த அறிவிப்பும் இதுவரையில் அரசுத் தரப்பில் இருந்து வரவில்லை.

இதற்கிடையில் அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது, கொரோனா தடுப்பூசி பற்றிய சந்தேகங்களுக்கு கேள்வி – பதில் வடிவிலேயே விடைகாண்போம்.

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள எனக்கு எத்தனை வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்?

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள நீங்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் அவசியம்.

தடுப்பூசிக்கு நான் பணம் செலுத்தவேண்டுமா?

அரசு அறிவித்துள்ள பல மையங்களில் இலவசமாகவே உங்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். (கீழே பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது)

யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளக் கூடாது?

அபுதாபி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கீழ்கண்ட நபர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள கூடாது.

  • 18 வயதிற்குட்பட்டவர்கள்.
  • கர்ப்பிணிப்பெண்கள்.
  • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்.
  • நோயெதிர்ப்பு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள்.
  • குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தவர்கள்.
  • தடுப்பூசி, உணவு, மருந்து அல்லது பிற பொருட்களால் எளிதில் அலேர்ஜி உருவாகும் வாய்ப்புள்ளவர்கள் அல்லது அட்ரெலின் சுயமாக செலுத்திக்கொள்கிறவர்கள்.

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள நான் முன்பதிவு செய்யவேண்டுமா?

அபுதாபி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் மையங்களுக்கு வேலை நேரங்களில் சென்று நீங்கள் நேரடியாக தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளல்லாம். அதற்காக நீங்கள் முன்பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை.

கொரோனா தடுப்பூசி மையத்தில் நான் என்னென்ன தகவல்களை அளிக்கவேண்டும்?

நீங்கள் கொரோனா தடுப்பூசி மையத்தின் சுகாதார அதிகாரிகளிடம் சென்று, கீழ்கண்ட தகவல்களை வழங்கவேண்டும்.

  • தற்போது நீங்கள் எடுத்துக்கொள்ளும் சிகிச்சை (ஏதாவது இருப்பின்).
  • உங்களுக்கு அலேர்ஜி ஏற்படுத்தக்கூடிய சிகிச்சை அல்லது மருந்துகள்.

சரி, இனி ஒவ்வொரு எமிரேட்டிலும் உள்ள இலவச கொரோனா தடுப்பூசி மையங்கள் என்ன என்பதைக் காண்போம்.

அபுதாபி

அபுதாபி சிட்டி

சுகாதார நிறுவனங்கள்

  1. அல் பஹியா சுகாதார மையம் – அமைவிடம்
  2. பனியாஸ் சுகாதார மையம் – அமைவிடம்
  3. அல் பதீன் சுகாதார மையம் – அமைவிடம்
  4. அல் ஃபலாஹ் ஹெல்த்கேர் சென்டர் – அமைவிடம்
  5. மதினத் கலீஃபா ஹெல்த்கேர் சென்டர் – அமைவிடம்
  6. அல் காதிம் சுகாதார மையம் – அமைவிடம்
  7. மதினத் முகமது பின் சயீத் ஹெல்த்கேர் சிட்டி – அமைவிடம்
  8. அல் மக்தா சுகாதார மையம் – அமைவிடம்
  9. அல் முஷ்ரிஃப் குழந்தைகள் சிறப்பு மையம் – அமைவிடம்
  10. அல் சம்ஹா சுகாதார மையம் – அமைவிடம்
  11. அல் ஜஃபரானா நோயறிதல் மற்றும் பரிசோதனை மையம் – அமைவிடம்
  12. நோய் தடுப்பு மற்றும் பரிசோதனை மையங்கள் ( Disease Prevention and Screening Centres), முசாஃபா – அமைவிடம்
  13. நோய் தடுப்பு மற்றும் ஸ்கிரீனிங் மையங்கள் (Disease Prevention and Screening Centres), அபுதாபி – அமைவிடம்
  14. சேஹா கோவிட் -19 தடுப்பூசி மையம், மினா – அமைவிடம்
  15. அல் மஃப்ராக் கள மருத்துவமனை – அமைவிடம்
  16. புர்ஜீல் மருத்துவமனை – அமைவிடம்
  17. புர்ஜீல் மருத்துவ மையம், ஷம்கா – அமைவிடம்
  18. புர்ஜீல் மருத்துவ மையம், ஷாஹாமா – அமைவிடம்
  19. புர்ஜீல் மருத்துவ மையம், அல் ஜீனா – அமைவிடம்
  20. புர்ஜீல் மருத்துவ மையம், யாஸ் மால் – அமைவிடம்
  21. புர்ஜீல் எம்.எச்.பி.சி மெரினா மருத்துவ மையம் – அமைவிடம்
  22. பர்ஜீல் நாள் அறுவை சிகிச்சை மையம் – அமைவிடம்
  23. Medeor 24×7 மருத்துவமனை – அமைவிடம்
  24. எல்.எல்.எச் மருத்துவமனை – அமைவிடம்
  25. லைஃப் கேர் மருத்துவமனை, முசாஃபா – அமைவிடம்
  26. எல்.எல்.எச் மருத்துவமனை, முசாஃபா – அமைவிடம்
  27. லைஃப் கேர் மருத்துவமனை, பனியாஸ் – அமைவிடம்
  28. புர்ஜீல் மெடிக்கல் சிட்டி – அமைவிடம்
  29. மெட்லினிக் அல் நூர் மருத்துவமனை – அமைவிடம்
  30. மெடிகிளினிக் விமான நிலைய சாலை – அமைவிடம்
  31. என்.எம்.சி சிறப்பு மருத்துவமனை, அபுதாபி – அமைவிடம்
  32. என்.எம்.சி ராயல் மருத்துவமனை, கலீஃபா சிட்டி – அமைவிடம்
  33. பரீன் சர்வதேச மருத்துவமனை – அமைவிடம்

மஜ்லிஸ்

  1. அல் பதீன் மஜ்லிஸ் – அமைவிடம்
  2. அல் மன்ஹால் மஜ்லிஸ் – அமைவிடம்
  3. அல் முஷ்ரிப் மஜ்லிஸ் – அமைவிடம்
  4. அல் வத்பா மஜ்லிஸ் – அமைவிடம்
  5. ரப்டன் மஜ்லிஸ் – அமைவிடம்
  6. அல் வத்பா தெற்கு மஜ்லிஸ் – அமைவிடம்
  7. முதல் எமிராட்டி விண்வெளி வீரர் மஜ்லிஸ் (The First Emirati Astronaut Majlis) – அமைவிடம்
  8. முகமது கலஃப் மஜ்லிஸ் – அமைவிடம்

அல் அய்ன்

சுகாதார நிறுவனங்கள்

  1. அல் ஹேயர் சுகாதார மையம் – அமைவிடம்
  2. அல் ஹிலி ஹெல்த்கேர் சென்டர் – அமைவிடம்
  3. அல் ஜஹிலி சுகாதார மையம் – அமைவிடம்
  4. மெசியாத் ஹெல்த்கேர் சென்டர் – அமைவிடம்
  5. அல் முவைஜி சுகாதார மையம் – அமைவிடம்
  6. நெய்மா ஹெல்த்கேர் சென்டர் – அமைவிடம்
  7. ஔத் அல் தௌபா நோயறிதல் மற்றும் பரிசோதனை மையம் – அமைவிடம்
  8. அல் குவா சுகாதார மையம் – அமைவிடம்
  9. அல் ஸ்வைப் சுகாதார மையம் – அமைவிடம்
  10. ஸ்வீஹான் சுகாதார மையம் – அமைவிடம்
  11. அல் தோவையா குழந்தைகள் சிறப்பு மையம் – அமைவிடம்
  12. அல் யஹார் சுகாதார மையம் – அமைவிடம்
  13. ரெமா ஹெல்த்கேர் சென்டர் – அமைவிடம்
  14. நோய் தடுப்பு மற்றும் பரிசோதனை மையங்கள், அல் அய்ன் – அமைவிடம்
  15. அல் கஸ்னா சுகாதார மையம் – அமைவிடம்
  16.  சேஹா கோவிட் -19 தடுப்பூசி மையம், அல் அய்ன் – அமைவிடம்
  17. தவாம் மருத்துவமனை கோவிட் -19 தடுப்பூசி மையம் – அமைவிடம்
  18. சினாயத் அல் அய்ன் கோவிட் -19 தடுப்பூசி மையம் – அமைவிடம்
  19. லேசர் ஸ்கிரீனிங் டிபிஐ மையம், அல் ஹிலி – அமைவிடம்
  20. புர்ஜீல் ராயல் மருத்துவமனை – அமைவிடம்
  21. Medeor 24-7 சர்வதேச மருத்துவமனை – அமைவிடம்
  22. மெடிகிளினிக் அல் ஜோஹாரா மருத்துவமனை – அமைவிடம்
  23. மெடிகிளினிக் அல் அய்ன் மருத்துவமனை – அமைவிடம்
  24. மெடிகிளினிக் அல் யஹார் – அமைவிடம்
  25. என்.எம்.சி சிறப்பு மருத்துவமனை, அல் அய்ன் – அமைவிடம்

மஜ்லிஸ்

  1. ஃபலாஜ் ஹசா மஜ்லிஸ், அல் அய்ன் – அமைவிடம்
  2. அல் சரூஜ் மஜ்லிஸ், அல் அய்ன் – அமைவிடம்
  3. அல்காபிசி மஜ்லிஸ், அல் அய்ன் – அமைவிடம்
  4. உம் காஃபா மஜ்லிஸ், அல் அய்ன் – அமைவிடம்
  5. சுவைஹான் மஜ்லிஸ், அல் அய்ன் – அமைவிடம்
  6. அல் ரோவ்தா மஜ்லிஸ், அல்அய்ன் – அமைவிடம்
  7. ஜாகர் மஜ்லிஸ், அல் அய்ன் – அமைவிடம்
  8. மனாசெஃப் மஜ்லிஸ், அல் அய்ன் – அமைவிடம்
  9. அல் தஹர் மஜ்லிஸ், அல் அய்ன் – அமைவிடம்
  10. அல் மார்க்கானியா மஜ்லிஸ், அல் அய்ன் – அமைவிடம்
  11. அல் விகான் மஜ்லிஸ், அல் அய்ன் – அமைவிடம்
  12. அல் தவேயா மஜ்லிஸ், அல் அய்ன் – அமைவிடம்
  13. அல் ரீஃப் மஜ்லிஸ், அல் அய்ன் – அமைவிடம்
  14. அல் மசௌதி மஜ்லிஸ், அல் அய்ன் – அமைவிடம்

அல் தஃப்ரா சுகாதார நிறுவனங்கள்

  1. கயாதி மருத்துவமனை – அமைவிடம்
  2. லிவா மருத்துவமனை – அமைவிடம்
  3. மிர்ஃபா மருத்துவமனை – அமைவிடம்
  4. சில்லா மருத்துவமனை – அமைவிடம்
  5. அல் தஃப்ரா குடும்ப மருத்துவ மையம் – அமைவிடம்
  6. டெல்மா மருத்துவமனை – அமைவிடம்
  7. அபு அல் அபியாத் கிளினிக் – அமைவிடம்
  8. சர் பனி யாஸ் கிளினிக் – அமைவிடம்
  9. புர்ஜீல் ஒயாசிஸ் மருத்துவ மையம் – அமைவிடம்
  10. மெடிகிளினிக் மதினத் சயீத் – அமைவிடம்

மஜ்லிஸ்

  1. மதினத் சயீத் மஜ்லிஸ், அல் தஃப்ரா – அமைவிடம்
  2. டெல்மா மஜ்லிஸ், அல் தஃப்ரா – அமைவிடம்
  3. முகமது அல் ஃபலாஹி அல் யாசி மஜ்லிஸ், அல் தஃப்ரா – அமைவிடம்
  4. சில்லா மஜ்லிஸ், அல் தஃப்ரா – அமைவிடம்
  5. லிவா மஜ்லிஸ், அல் தஃப்ரா – அமைவிடம்
  6. முபாரக் பின் கர்ரான் மஜ்லிஸ் – அமைவிடம்

துபாய்

  1. அலித்திஹாட் சுகாதார மையம்: ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை காலை 8-10 மணி வரை. தொலைபேசி: 043421005.
  2. ஹோர் அல் அன்ஸ் சுகாதார மையம்: ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை காலை 8-10 மணி வரை. தொலைபேசி: 042153999.
  3. அல் குசைஸ் சுகாதார மையம்: ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை காலை 8-10 மணி வரை. தொலைபேசி: 042316400.

ஷார்ஜா

  1. வாசித் சுகாதார மையம்: ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை காலை 8 – இரவு 8 மணி, தொலைபேசி: 06-5183333.
  2. ஷேக் கலீஃபா ஹால்: ஞாயிறு முதல் சனி வரை; காலை 8.00 – இரவு 10மணி வரை தொலைபேசி; 06-7069627.
  3. குடும்ப சுகாதார மேம்பாட்டு மையம் (Family Health Promotion Centre) : ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மற்றும் வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை – மாலை 6 மணி முதல் 9 மணி வரை; தொலைபேசி: 06-5090800.
  4. அல் தைத் சுகாதார மையம்: ஞாயிறு-வியாழன் காலை 8.00 மணி முதல் இரவு 8 மணி வரை.
  5. அல் மதாம் சுகாதார மையம்: ஞாயிறு-சனிக்கிழமை; காலை 8-8 மணி; தொலைபேசி 06-88221122.
  6. அல் மலிஹா சுகாதார மையம்: ஞாயிறு – வியாழக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை; தொலைபேசி 06-8023583.
  7. முகைதர் சப்அர்ப் கவுன்சில்(Mughaider suburb Council) : சனி-வியாழன்; காலை 8-10 மணி: 06-5579979.
  8. வெஸ்ட் டெண்ட்; மாலை 4 மணி முதல் 10 மணி வரை: வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 10 மணி வரை, தொலைபேசி: 06-5579979.
  9. சஜா மால்: ஞாயிறு – வியாழக்கிழமை மாலை 3-10 மணி; தொலைபேசி 065579979 .
  10. அல் ரிஃபா சுகாதார மையம்: ஞாயிறு – வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை, மாலை 06-5183151.
  11. அல் கலீதியா சுகாதார மையம்: ஞாயிறு – வியாழக்கிழமை காலை 8-1 மணி மற்றும் மாலை 5-8 மணி, தொலைபேசி 06-5183151.
  12. அல் ரிக்கா சுகாதார மையம்: ஞாயிறு – வியாழக்கிழமை காலை 8-1 மணி மற்றும் மாலை 5 மணி முதல் மாலை 8 மணி வரை; தொலைபேசி 06-5167409, 06-5167404.
  13. ஷார்ஜா சுகாதார மையம்: ஞாயிறு-வியாழன் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை; தொலைபேசி 06-5183009, 06-5183010.
  14. அல் ஹம்ரியா சுகாதார மையம்: ஞாயிறு-வியாழன் காலை 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மாலை 5 மணி வரை; தொலைபேசி 06-5193777.
  15. கல்பா சுகாதார மையம்: ஞாயிறு-வியாழன் காலை 8-8 மணி, வெள்ளி மற்றும் சனிக்கிழமை: மாலை 6-9 மணி; தொலைபேசி 09 2048000.
  16. அல் நஹ்வா சுகாதார மையம்: ஞாயிறு-வியாழன் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை; தொலைபேசி 09-2081662.
  17. ஹெவயா மாவட்ட சபை (Hewaya District Council): ஞாயிறு-வியாழன் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
  18. திப்பா அல் ஹுஸ்ன்: மாவட்ட கவுன்சில், ஞாயிறு-வியாழன் காலை 9 முதல் மாலை 5 மணி வரை.
  19. அகாடமிக் சிட்டி ஆடிட்டோரியம், கல்பா: ஞாயிறு-வியாழன் காலை 9 முதல் மாலை 5 மணி வரை.

தனியார் மருத்துவமனைகள்

  1. அல் சஹ்ரா மருத்துவமனை.
  2. சுலேகா மருத்துவமனை.
  3. மத்திய தனியார் மருத்துவமனை (Central Private Hospital).
  4. சவுதி ஜெர்மன் மருத்துவமனை.
  5. புர்ஜீல் சிறப்பு மருத்துவமனை.
  6. பிரைம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.
  7. பிரைம் மெடிக்கல் சென்டர், அல் நஹ்தா.
  8. பிரைம் மருத்துவ மையம் EGM.
  9. தும்பே மருத்துவமனை.
  10. மெட்கேர் மருத்துவமனை.

அஜ்மான்

தனியார் சுகாதார நிலையங்கள்

  1. அமினா மருத்துவமனை.
  2. பிரதம மருத்துவ மையம்.
  3. தும்பே மருத்துவமனை.

அரசு சுகாதார நிலையங்கள்

  1. ஷேக் கலீஃபா ஹால்: ஞாயிறு – வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை; தொலைபேசி 06-7033662.
  2. அல் ஹுமிதியா சுகாதார மையம்: ஞாயிறு-சனிக்கிழமை காலை 8-12.30 மணி மற்றும் மாலை 5-8.30 மணி, வெள்ளிக்கிழமை மாலை 5-8.30 மணி; தொலைபேசி 048522179, 04-8522928.
  3. முஷரெஃப் சுகாதார மையம்: ஞாயிறு-சனிக்கிழமை காலை 8-12.30 மணி மற்றும் மாலை 5-8.30 மணி; தொலைபேசி 06-714147900, 06 7147921.
  4. அல் மனாமா சுகாதார மையம்: ஞாயிறு-வியாழன் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை; திங்கள் & வியாழன் மாலை 5-7.30 மணி, சனிக்கிழமை காலை 8-1 மணி; தொலைபேசி 06-8827324, 06-8023425.
  5. முசைரா சுகாதார மையம்: ஞாயிறு-வியாழன் காலை 8-1 மணி, மாலை 4-8.30 மணி, சனிக்கிழமை காலை 8-12.30 மணி மற்றும் மாலை 4-8.30 மணி; தொலைபேசி 06-7033600.

உம் அல் குவைன்

  1. ஷேக் கலீஃபா ஹால்: ஞாயிறு- வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை, சனிக்கிழமை இரவு 9 மணி முதல் 2 மணி வரை, தொலைபேசி 067069627.
  2. ஃபாலாஜ் அல் முவல்லா மையம்: ஞாயிறு- வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை; தொலைபேசி 06-8022200.
  3. அல் ரஃபா சுகாதார மையம்: ஞாயிறு-வியாழன் காலை 8.30 -12.30 மணி மற்றும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை; தொலைபேசி 06-7069444.
  4. அல் கஸன் சுகாதார மையம்: ஞாயிறு-வியாழன் காலை 8 முதல் மாலை 6 மணி வரை; தொலைபேசி 06-7069555.

புஜைரா

  1. அல் சிஜி பிரைம் சுகாதார மையம்: ஞாயிறு-வியாழன் காலை 8-3 மணி.
  2. வாதி அல் செதிர் சுகாதார மையம்: ஞாயிறு-வியாழன் காலை 8 முதல் 2 மணி வரை.
  3. கித்ஃபா சுகாதார மையம்: ஞாயிறு-வியாழன் காலை 7.30 முதல் 2.30 மணி மற்றும் மாலை 4 மணி முதல் 10 மணி வரை, வெள்ளிக்கிழமை மாலை 5 முதல் 10 மணி வரை, சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை.
  4. ஸ்கூல் சுகாதார மையம் (School Health Centre): ஞாயிறு-வியாழன் காலை 7.30 முதல் பிற்பகல் 2.30 மணி.
  5. திப்பா கண்காட்சி மையம் (Dibba Exhibition Centre) : சனி-வியாழன் காலை 9-9 மணி
  6. தும்பே மருத்துவமனை.

ராஸ் அல் கைமா

  1. சைஃப் பின் அலி சுகாதார மையம்: ஞாயிறு – வியாழக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை; தொலைபேசி 07-2460333.
  2. அல் ஹம்ரானியா சுகாதார மையம்: ஞாயிறு-வியாழன் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை; தொலைபேசி 07-248666.
  3. அல் நகீல் சுகாதார மையம்: ஞாயிறு-வியாழன் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, தொலைபேசி 07-2468444.
  4. அல் டிக்டாகா சுகாதார மையம்: ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழன் வரை காலை 8 மணி முதல் பிற்பகல் 07-2468000.
  5. ஷமல் சுகாதார மையம்: ஞாயிறு-வியாழன் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை; தொலைபேசி 072048000.
  6. விளையாட்டு அரங்கம் (Sports Hall): சனி-வியாழன் காலை 8-3 மணி.
  7. ஷேக் கலீஃபா ஹால்: காலை 8 முதல் மாலை 3 மணி வரை தொலைபேசி 06-7069267.
  8. அல் ஃபரேக் அல் மோட்டனக்கெல் (Al Fareq Al Motanaqel): ஞாயிறு-வியாழன் காலை 8 மணிமுதல் மதியம் 3 மணிவரை.
  9. ஆர்.ஏ.கே மருத்துவமனை (RAK Hospital).
  10. RAK எக்ஸ்போ மையம்: ஞாயிறு – வியாழக்கிழமை காலை 8 முதல் மாலை 3 மணி, சனிக்கிழமை காலை 8 மணிமுதல் மதியம் 2 மணி வரை; தொலைபேசி 056121549.
  11. அல் ஜஸீரா சுகாதார மையம்: ஞாயிறு – வியாழக்கிழமை காலை 8 மணி – பிற்பகல் 1 மணி மற்றும் மாலை 4 மணி முதல் -7 மணி வரை; 07-2469222.
  12. அல் மமூரா சுகாதார மையம்: ஞாயிறு-வியாழன் காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி மற்றும் மாலை 4-7 மணி வரை, 072024999.
  13. அல் மனாய் சுகாதார மையம்: ஞாயிறு-வியாழன் காலை 8 முதல் பிற்பகல் 5 மணி வரை, மாலை 5-10 மணி வரை; தொலைபேசி 04-8205333.
  14. ஷோவ்கா சுகாதார மையம்: ஞாயிறு – வியாழக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை; தொலைபேசி 06-5027100.
  15. கத்ரா சுகாதார மையம்: ஞாயிறு-வியாழன் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை; தொலைபேசி 06-8021999.
  16. வாதி சிஃப்னி சுகாதார மையம்: ஞாயிறு-வியாழன் காலை 8 மணி முதல் மாலை; தொலைபேசி 06-8035888.
  17. அல் ராம்ஸ் சுகாதார மையம்: ஞாயிறு-வியாழன் காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி மற்றும் மாலை 7-7 மணி; தொலைபேசி 07-2468555.