UAE Tamil Web

“இந்த ஆவணங்கள்” இல்லையென்றால் அபுதாபிக்குள் நுழைய முடியாது – புதிய கட்டுப்பாடுகளை விதித்த அரசு..!

Abudhabi

பிற எமிரேட்களில் இருந்து அபுதாபி வருவோர் பின்பற்றவேண்டிய விதிமுறைகளை அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஈத் அல் அத்ஹா பண்டிகையை முன்னிட்டு சமூக பாதுகாப்பு மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த விதிமுறைகள் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெகட்டிவ் சான்றிதழ்

வரும் ஜூலை 19 ஆம் தேதிமுதல் அபுதாபிக்குள் நுழைபவர்கள் கண்டிப்பாக நெகட்டிவ் PCR அல்லது DPI சான்றிதழை சமர்பிக்கவேண்டும்.

PCR பரிசோதனையாக இருந்தால் மக்கள் தங்களது பயண நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பும் DPI என்றால் 24 மணி நேரத்திற்கு முன்பும் பரிசோதனையை எடுத்திருக்கவேண்டும்.

PCR டெஸ்ட் முடிவுகளைக் காட்டி அபுதாபிக்குள் நுழைபவர்கள் அபுதாபி வந்தடைந்த 4 & 8 ஆம் நாளில் மீண்டும் PCR பரிசோதனையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் DPI எடுத்திருந்தால் 3 & 7 வது நாளில் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும்.

DPI பரிசோதனையின் முடிவுகளை அடுத்தடுத்து அபுதாபிக்குள் நுழைய பயன்படுத்த முடியாது.

Alhosn அப்ளிகேஷனில் சிறப்பு ஸ்டேட்டஸ் வைத்திருப்பவர்களும் இந்த விதிமுறையை கடைபிடிக்கவேண்டும். முன்னதாக இதுபோன்ற விதிமுறைகளில் தங்களது Alhosn அப்ளிகேஷனில் E அல்லது தங்க நட்சத்திரம் (Gold Star) வைத்திருப்பவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுவந்தது. ஆனால் இம்முறை சிறப்பு ஸ்டேட்டஸ் வைத்திருப்பவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏதும் குறிப்பிடவில்லை.

கூட்டம் கூடாது

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு பொது இடங்களில் அனுமதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கைக்கும் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, அபுதாபி கடற்கரைகள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள், உணவகங்கள், கஃபேக்கள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள ஸ்பாக்கள், பேருந்துகள் மற்றும் பெர்ரிஸ் ஆகியவை 50 சதவீத மக்களுடன் மட்டுமே இயங்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாப்பிங் மால்கள் 40% திறனுடனும் தியேட்டர்கள் 30% திறனுடனும் இயங்கவுள்ளன. மேலும் 5 பேர் செல்லும் டாக்சிக்களில் இனி 3 பேரும் 7 பேர் செல்லகூடிய டாக்சிக்களில் அதிகபட்சம் 4 பேர் மட்டுமே பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Abudhabi
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap