UAE Tamil Web

அமீரக வாழ் இந்தியர்கள் கவனத்திற்கு: துபாய் துணைத் தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

consulate

அமீரகத்தில் கொரோனா வழக்குகள் அதிகமாகி வருவதால் துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • அமீரகத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைபிடித்தல் மற்றும் பொது இடங்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடைமுறைகளை அமீரக வாழ் இந்தியர்கள் அனைவரும் கடைபிடிக்கவேண்டும்.
  • அவசர காரணங்கள் அன்றி அமீரக வாழ் இந்திய மக்கள் யாரும் துணைத் தூதரக அலுலவலகத்திற்கு நேரில் வரவேண்டாம்.
  • இதற்கு மாற்றாக இணையம் மூலமாக வழங்கப்படும் துணைத் தூதரக சேவைகளை அமீரக வாழ் மக்கள் பெறலாம்.

துபாயில் உள்ள துணைத் தூதரகத்தை தொடர்புகொள்ளும் வழிகள்:

PBSK – இலவச தொலைபேசி எண் -800 46342 (24×7 அழைக்கலாம்)

PBSK துபாய் மொபைல் அப்ளிகேஷன்

மின்னஞ்சல் முகவரி: pbsk.dubai@mea.gov.in

வாட்சாப்: 054-3090571