UAE Tamil Web

“இந்த ஊழியர்கள் அனைவரும் வாரமொருமுறை PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்” – துபாய் அரசு வெளியிட்ட அறிவிப்பு..!

PCR Test

துபாய்: கல்வித்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள தகுதி பெற்றும், சுய விருப்பத்தின் பேரில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் கட்டாயம் வாரமொருமுறை PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

ஊழியர்கள் வீட்டிலிருந்து அல்லது கல்விக்கூடத்தில் பணிபுரிந்தாலும் இந்நடைமுறை பொருந்தும்.

அறிவு மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை (KHDA) வெளியிட்டுள்ள இந்தப் புதிய விதிமுறைகள் ஏப்ரல் 11 ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரவிருக்கின்றன.

துபாயில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையங்கள், துவக்க நிலை கல்வி மையங்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.

கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களும் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கொரோனா தடுப்பூசி பெற தற்போது தகுதி பெறவில்லை என்றால் அல்லது கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை நீங்கள் பெற்றிருந்தால் 7 நாட்களுக்கு ஒருமுறை PCR பரிசோதனை செய்யவேண்டிய அவசியமில்லை” என KHDA வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.