UAE Tamil Web

ஒரே மாதத்தில் 19 லட்சம் பயணிகள் : உலகின் பிசியான ஏர்போர்ட் பட்டியலில் தொடர்ந்து 7 வது முறையாக முதலிடம் பிடித்த துபாய் விமான நிலையம்..!

DXB AIRPORT

கொரோனா தடுப்பூசித் திட்டம், கடுமையான வழிமுறைகள் என அமீரகம் கொரோனாவை எதிர்த்து துணிவுடன் போராடுவதனால் கடந்தாண்டு விதித்த விமானப் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட தடைகளை அமீரகம் விலக்கியது. இதன்காரணமாக வழக்கம்போல் துபாய் விமான நிலையம் (DXB) பரபரப்பாக காணப்படுகிறது.

விமான உளவுத்துறை நிறுவனமான OAG வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் மே மாதத்தில் மட்டும் 19 லட்சம் பயணிகளை துபாய் விமான நிலையம் கையாண்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டின் ஜனவரி – மார்ச் வரையிலான முதலாம் காலாண்டில் 5.75 மில்லியன் மக்களைக் கையாண்டு உலகின் மிகவும் பிசியான விமான நிலையமாக துபாய் விமான நிலையம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஏர்போர்ட் கவுன்சில் இண்டர்நேஷனல் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2014 ஆம் ஆண்டு உலகின் மிகவும் பிசியான விமான நிலையம் என்னும் பட்டியலில் லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்தினை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி முதலிடம் பிடித்தது DXB. அப்போதிருந்து இந்நேரம் வரை அந்த முதலிடத்தில் DXB தொடர்கிறது.

கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்த கடந்தாண்டிலேயே DXB, 25.9 மில்லியன் மக்களைக் கையாண்டிருக்கிறது என்பது ஆச்சர்யமான விஷயம் தான். அதேபோல, துபாய் விமான ஆணையத்தின் தகவலின்படி இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 7.61 மில்லியன் மக்கள் DXB க்கு வருகைபுரிந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1.87 மில்லியன் மக்கள் இந்த விமான நிலையத்தினைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

1.3 மில்லியன் மக்கள் பயன்பாட்டுடன் துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம் இரண்டாவது பிசியான விமான நிலையமாவும் 1.22 மில்லியன் மக்களுடன் தோஹா விமான நிலையம் மூன்றாம் இடத்திலும் ஒரு மில்லியன் மக்களுடன் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் நான்காம் இடத்திலும் இருப்பதாக OAG வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

DXB AIRPORT
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap