UAE Tamil Web

அமீரகம் : வீட்டு தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளில் மாற்றம் – அபுதாபி அரசின் புதிய அறிவிப்பு..!

home-quarantine

அபுதாபி: கொரோனா பாதித்தவருடன் நெருங்கி இருந்தவர்களுக்கான வீட்டு குவாரண்டைன் விதிமுறைகளை அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் புதுப்பித்துள்ளது. அதன்படி,

தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள்

  • 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • 6 வது நாளில் PCR டெஸ்ட் எடுத்தல் வேண்டும்.
  • பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்தால் 7 ஆம் நாளில் கைப்பட்டையை (Wristband) அகற்றிவிடலாம்.

தடுப்பூசி எடுக்காதவர்கள்

  • 12 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • 11 வது நாளில் PCR டெஸ்ட் எடுத்தல் வேண்டும்.
  • பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்தால் 12 ஆம் நாளில் கைப்பட்டையை (Wristband) அகற்றிவிடலாம்.

வீட்டு குவாரண்டைன் திட்டத்தில் பதிவு செய்தவர்கள் கீழ்க்கண்ட இடங்களில் உள்ள கொரோனா உதவி மையங்களுக்குச் சென்று தங்களது கைப்பட்டையை அகற்றிக்கொள்ளலாம்.

  • சயீத் போர்ட்
  • மஃப்ராக் மருத்துவமனை மற்றும் அட்னெக் (அபுதாபி சிட்டி)
  • அல் அய்ன் கன்வென்ஷன் செண்டர்
  • அல் குபியாசி
  • அல் தஃப்ராவில் உள்ள மதினத் சயீத்
  • அல் தஃப்ராவில் உள்ள அனைத்து சேஹா மருத்துவமனைகளும் இந்த சேவையை வழங்குகின்றன.
home-quarantine
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap