UAE Tamil Web

அமீரகத்தில் பள்ளிகள், ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கான புதிய கொரோனா விதிமுறைகள்!

அமீரகத்தில் பள்ளிகள், ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கான புதிய கொரோனா விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தன.

எமிரேட்ஸ் பள்ளிகள் ஸ்தாபனம் (ESE) பொதுப் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அனைவரின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க இந்த வாரத்தில் இந்த கொரோனா நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

ஆசிரியர்கள், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களை குழுக்களாகப் பிரிப்பது (உதாரணமாக, A, B மற்றும் C) மற்றும் அவர்களின் வேலை நேரம் வரும் வாரத்தில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பள்ளிகள் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களுக்கு தனி அறைகளை வழங்க வேண்டும். அவர்களை எல்லா நேரங்களிலும் ஒன்றாக இருக்க அனுமதிக்கக்கூடாது. கூட்டங்களை நேரடியாக நடத்தாமல் ஆன்லைன் மூலம் வீடியோ முறையில் நடத்தலாம்.

நாட்டில் உள்ள அனைத்து பொதுப் பள்ளிகளுக்கும் விநியோகிக்கப்பட்ட ஒரு சுற்றறிக்கையில், ஜனவரி 17ந் தேதி முதல் ஜனவரி 21 வரை இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று ESE தெரிவித்துள்ளது.

அனைத்து UAE பொதுப் பள்ளி மாணவர்களும் தொலைதூரக் கற்றலுடன் இரண்டாம் பருவத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். இதே நடைமுறை 2 வாரங்களுக்கு தொடரும். குறைந்தபட்சம் ஜனவரி 21 வரை தொலைதூரத்தில் வகுப்புகள் நடத்தப்படும்.

இருப்பினும், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் தொலைதூர வகுப்புகளை நடத்த பள்ளி வளாகங்களுக்குச் செல்கிறார்கள். சுற்றறிக்கையில், பள்ளி நிர்வாகிகள் தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதையும், அவர்கள் பள்ளி வளாகத்தில் இருக்கும்போதெல்லாம் முக கவசம் அணிவது மற்றும் உடல் ரீதியான தூரத்தைப் பேணுவது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ESE வலியுறுத்தியுள்ளது.

Distance-learningஏதேனும் ஒரு குழுவில் (A, B, C அல்லது ..) யாருக்காவது கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்தால், பாதிக்கப்பட்டவர் ரிமோட் பணிக்கு மாறுவது உட்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும். பெற்றோர்கள் அல்லது மாணவர்களின் பாதுகாவலர்கள் மற்றும் பிறர் உட்பட பார்வையாளர்களை சந்திக்கும் போது, ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்திற்குச் செல்லும் ஒவ்வொருவரும் தங்கள் Al Hosn செயலியில் பச்சை நிற பாஸ் வைத்திருக்க வேண்டும். எல்லா நேரங்களிலும் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும், இடைவேளை அல்லது மதிய உணவு நேரத்திலும் ஒவ்வொருவரும் தங்கள் அலுவலகங்களில் தனியாக உணவு உண்ண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் உணவு அல்லது பானங்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நேரத்தில், பள்ளி வளாகங்களில் தங்கள் பணியாளர்கள் இருக்கக்கூடாது என்று பள்ளிகளை சுத்தம் செய்யும் நிறுவனங்களுக்கு பள்ளி நிர்வாகிகள் எச்சரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பிற நிறுவனங்களின் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி சேவை வழங்குபவர்களும் அல் ஹோஸ்ன் செயலியில் பச்சை பாஸ் நிலை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடையே யாருக்காவது கொரோனா உறுதி செய்யப்பட்டால் அல்லது அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை பள்ளிகளுக்குள் அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும்.

1 Share
Share via
Copy link