UAE Tamil Web

ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளில் கொரோனா தடுப்பு விதிகளை மீறினால் 50,000 திர்ஹம்ஸ் வரை அபராதம்.. புதிய அறிவிப்பு!

Copy_of_UAE_National_Day_at_Dubai_Festival_City_2018_1_16a08526539_original-ratio

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக அமீரக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திருமணம், பிறந்தநாள் கொண்டாட்டம், இதர விழாக்கள் உள்ளிட்டவைகளை குறைந்த எண்ணிக்கையிலான மக்களுடன் மட்டுமே கொண்டாட அமீரக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இதில் சில தளர்வுகளுடன் பொழுபோக்கு, கருத்தரங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை 60% பார்வையாளர்களுடன் நடத்திக்கொள்ளலாம் என அபுதாபி அரசு அறிவித்தது. இதேபோல திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 100 பேர் வரை கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. துபாயை பொருத்தவரை அனைத்து நிகழ்ச்சிகளும் 60% பார்வையாளர் அல்லது அதிகபட்சமாக 300 பேருடன் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறி அதிகளவில் கூட்டத்தை சேர்த்தால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு 10,000 திர்ஹம்சும் பங்கேற்பாளர்களுக்கு 5,000 திர்ஹம்ஸ் அபராதமும் வசூலிக்கப்படும் என அமீரக அரசு எச்சரித்துள்ளது.

Coronavirus: Abu Dhabi bans wedding celebrations | Uae – Gulf News

திருமணம் உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் விதிமீறினால் ஏற்பாட்டாளர்களுக்கு 50,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும். இதேபோல நிகழ்ச்சிகளில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்கத் தவறினால் 10,000 திர்ஹம்ஸ் அபராதம் கட்ட நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருமணம், இறுதிச்சடங்கு அல்லது ஏதேனும் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கச் செல்லும் மக்கள் கட்டாயம் தனி மனித இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Copy_of_UAE_National_Day_at_Dubai_Festival_City_2018_1_16a08526539_original-ratio
0 Shares
Share via
Copy link