UAE Tamil Web

“இந்தியாவிற்கு ஆக்சிஜன் அளித்ததற்கு மிக்க நன்றி” – அமீரகம், சவூதி உள்ளிட்ட நாடுகளுக்கு நன்றி தெரிவித்த இந்திய அமைச்சர்..!

INDIA MP

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிற்கு மருத்துவ நீர்ம நிலை ஆக்சிஜனை வழங்கிய மத்திய கிழக்கு நாடுகளுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் இந்திய எரிவாயு மற்றும் பெட்ரோல் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

தனது தொடர்ச்சியான ட்வீட்கள் மூலமாக அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்தியாவிற்கு ஆக்சிஜன் வழங்க முன்வந்துள்ள அமீரகம், சவூதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற நாடுகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.