UAE Tamil Web

அமீரகம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளின் விரிவான பட்டியல்..!

IBN Mall

கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக அமீரக அரசு பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை விதிமுறைகளை வெளியிட்டு, நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அவற்றை சரியாக கடைபிடிக்கின்றனரா? என்பதையும் கண்கானித்துவருகிறது.

- Advertisment -

இருப்பினும் அவ்வப்போது இத்தகைய முன்னெச்சரிக்கை விதிமுறைகளைப் பின்பற்றாமல் பல நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் சட்ட சிக்கலைச் சந்தித்து வருகின்றனர்.

ஆகவே, அமீரகம் முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அபுதாபி

  • அபுதாபி அரசு மற்றும் பகுதி அரசு அலுவலகங்களில் (Government and Semi Government Office) பணிபுரியும் ஊழியர்களில் 30 சதவீத பேர் மட்டுமே அலுவலகத்திற்கு வரலாம்.
  • திருமணங்களில் அதிகபட்சமாக 10 பேரும், இறுதிச் சடங்கு மற்றும் இரங்கல் கூட்டத்தில் 20 பேரும் பங்கேற்கலாம்.
  • பார்ட்டிகள் மற்றும் மக்கள் ஒன்றுகூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
  • கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத ஊழியர்கள் அனைவரும் வாரமொருமுறை PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • மறு அறிவிப்பு வரும் வரையில் சினிமா தியேட்டர்கள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • மால்கள் 40 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம்.
  • ரெஸ்டாரன்ட், காபி ஷாப், உணவகங்கள், பொது கடற்கரை ஆகியவை 60 சதவிகித மக்களுடன் இயங்கலாம்.
  • விளையாட்டு அரங்கங்கள் ஒரே நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம்.
  • உடற்பயிற்சி நிலையங்கள், தனியார் கடற்கரைகள், நீச்சல் குளங்கள் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம்.
  • டாக்சி 45 சதவிகிதமும் பேருந்துகள் 75 சதவிகித திறனுடன் இயங்கலாம்.

துபாய்

  • பப்கள் மற்றும் பார்கள் மூடப்பட்டுள்ளன.
  • ஷாப்பிங் மால்கள் 70 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம்.
  • சினிமா, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு போன்ற உள் அரங்கங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் 50 சதவிகிதம் பேர் கலந்துகொள்ளலாம்.
  • ஹோட்டல்கள் 70 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம்.
  • ஹோட்டல்களுடன் கூடிய தனியார் கடற்கரைகள், நீச்சல் குளங்கள் தங்களது மொத்த திறனில் 70 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம்.
  • ரெஸ்டாரன்ட் மற்றும் கபேக்கள் அதிகாலை 1 மணிக்குள் மூடப்பட வேண்டும். அதேபோல, இவ்வளாகங்களில் எவ்வித பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது.

ஷார்ஜா

  • சமூக நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 20 பேர் கலந்துகொள்ளலாம்.
  • அனைத்து விருந்தினர்களும் குறைந்தபட்சம் 4 மீட்டர் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவேண்டும்.
  • நிகழ்ச்சி நடைபெறும் இடம் காற்றோட்டமுள்ள இடமாக இருத்தல் அவசியம்.
  • கைகுலுக்குதல் மற்றும் கட்டியணைத்தல் போன்ற செயல்களை விருந்தினர்கள் தவிர்த்தல் வேண்டும்.
  • அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிதல் வேண்டும்.
  • ஒரே டேபிளுக்கு 4 பேர் மட்டுமே அமரலாம்.

அஜ்மான்

  • உணவகங்கள் நள்ளிரவு 12 மணியுடன் மூடப்பட வேண்டும்.
  • கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத அரசு ஊழியர்கள் வாரமொருமுறை PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

எந்தெந்த ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்?

பெடரல் ஊழியர்கள், அபுதாபி, அஜ்மான், உம் அல் குவைன் மற்றும் ராஸ் அல் கைமாவைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் 7 நாட்களுக்கு ஒருமுறை PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்களுக்கு இதில் விலக்களிக்கப்பட்டுள்ளது.