UAE Tamil Web

முழுவதும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட விமானிகள், பணியாளர்கள் மற்றும் பயணிகள் மட்டுமே பயணிக்கும் எமிரேட்ஸ் விமானம் இன்று புறப்படுகிறது..!

emirates

அமீரகத்தின் தடுப்பூசித் திட்டத்தின் சிறப்பைக் கொண்டாடும் வகையில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட விமானிகள், பணியாளர்கள் மற்றும் பயணிகள் ஆகியோர் பயணிக்கும் சிறப்பு எமிரேட்ஸ் விமானம் இன்று தனது பயணத்தை மேற்கொள்கிறது.

இந்த சிறப்பு விமானம் (EK2021) அமீரக நேரப்படி மதியம் 12 மணிக்கு பயணத்தைத் துவங்கியது. அமீரகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மீண்டும் 14:30 மணிக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு இவ்விமானம் திரும்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தின் தடுப்பூசித் திட்டத்தைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், எமிரேட்ஸ் விமான நிறுவனம் தனது பணியாளர்களிடையே தடுப்பூசி பெறுவதை ஊக்குவிப்பதைப் பாராட்டும் வகையில் இந்த சிறப்பு விமான சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரீமியம் எகனாமிக் கிளாஸ், மற்றும் அழகான இன்டீரியர் வசதிகளைக் கொண்டுள்ள எமிரேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான A380 விமானத்தில் பயணிக்க இதன்மூலம் மக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.