UAE Tamil Web

அமீரகத்தில் கொரோனாவை வைத்து கொள்ளையடிக்கும் கும்பல் : எச்சரிக்கும் காவல்துறை..!

online shopping

பிரபல உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் சென்டர்களின் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி அதன்வழியே மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் சம்பவம் சமீப காலங்களில் அதிகரித்திருப்பதாக ஷார்ஜா மற்றும் அஜ்மான் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அஜ்மான் காவல்துறையின் ஊடகம் மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் மேஜர் நோரா அல் ஷம்சி இதுகுறித்துப் பேசுகையில்,” மக்கள் இம்மாதிரியான ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும்போது கவனமாக செயல்படும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுத் திட்டங்களை காவல்துறை மேற்கொண்டுவருகிறது” என்றார்.

மக்கள் உணவகங்களுக்கு போன் செய்து தங்களுக்கு வேண்டிய உணவு மற்றும் பிற பொருட்களை ஆர்டர் செய்து; பொருட்கள் டெலிவரி ஆகும் வேளையில் அதற்கான பணத்தினை செலுத்துமாறு காவல்துறை எச்சரித்திருக்கிறது.

மேலும் புகழ்பெற்ற உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் சென்டர்களின் பெயர்களைப் பயன்படுத்தி, கொள்ளையில் ஈடுபடும் இம்மாதிரியான போலி இணையதள மோசடி குறித்து சமூக வலைதளங்களில் மக்களை காவல்துறை எச்சரித்துவருகிறது.

கொரோனா காலத்தில் மக்கள் பெருமளவு வீட்டிற்குள்ளேயே இருப்பதால், ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்க விரும்புகிறார்கள். இந்தக் கொள்ளையர்கள் அதனை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு இந்த நாச வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இவர்களிடமிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள கவனமாக இருத்தல் வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

online shopping
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap