UAE Tamil Web

ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் 2655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

UAE Covid

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று 2,655 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதார அமைச்சகம் (MOHAP) தெரிவித்துள்ளது. இதனால் கொரோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 82 ஆயிரத்து 866 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. புதிய வகை கொரோனாவான ஒமைக்ரானும் அதிவேகத்தில் பரவி வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் பலவும் வைரஸ் பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில், கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ளாத குடிமக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை மறுநாள் முதல் அமலுக்கும் வரும் என தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

அமீரகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பால், அபுதாபியில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருமணங்கள், பொது நிகழ்ச்சிகளுக்கும் போன்றவற்றிற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அமீரகத்தில் 3 பேர் கொரோனோவால் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,173 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், 1,034 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில், 7 லட்சத்து 52 ஆயிரத்து 120 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், 28 ஆயிரத்து 576 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 114.5 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 22.8 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் முதல் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளில் உறுதியுடன் இருக்குமாறும், தகுதி இருந்தால் தடுப்பூசியின் பூஸ்டர் ஷாட்டை எடுக்குமாறும் அதிகாரிகள் குடிமக்களை வலியுறுத்தி வருகின்றனர்.

ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடையே ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக துபாயில் உள்ள பல பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு தொலைத்தூர கல்வி முறைக்கு மாறியுள்ளன.

பிசிஆர் டெஸ்டில், பெரும்பாலான மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா ரிசல்ட் நெகட்டிவ் என வருவதால் சில வளாகங்கள் அடுத்த வாரம் முதல் இயல்பான நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

UAE Covid
2 Shares
Share via
Copy link