UAE Tamil Web

கோவிட்-19: தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுமா.? அமீரக அதிகாரி விளக்கம்..

vaccine

அமீரகத்தில் சீனாவின் சினோஃபார்ம் கோவிட் -19 தடுப்பூசி குடியிருப்பாளர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisment -

தொற்று பாதிப்புகள் சரியான நிலையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி தேவையா என்பது மேலதிக சோதனைகள் மூலம் தீர்மானிக்கப்படும் என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே மிதமானது முதல் கடுமையான கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு ஆளான நபர்கள் வைரஸுக்கு எதிராக போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியிருக்கலாம்.

அதே சமயம் கோவிட் தொற்றால் மிக சிறிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அறிகுறியற்ற நோயாளிகளாக இருந்தவர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கோவிட்-19 தொற்றிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முடிவு பெரும்பாலும் மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் மதிப்பீடுகளைப் பொறுத்தது என அமீரக அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஒமர் அப்துல்ரஹ்மான் அல் ஹமாதி தெரிவித்துள்ளார்.

ஒரு நபருக்கு இன்னும் தடுப்பூசி தேவையா என்பதை தீர்மானிக்க நோய் எதிர்ப்பு சக்தி சோதனைகள் நடத்தப்படும். சோதனையில் குறிப்பிட்ட நபருக்கு ஆன்டிபாடிகள் உருவாகவில்லை என்றால், அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்றார்.

முக்கிய அறிவுரை:

மேலும் பேசிய அதிகாரி மாநாட்டின் போது வர உள்ள பண்டிகை காலங்களில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு குடியிருப்பாளர்களை அறிவுறுத்தினார். மேலும் தற்போது, குளிர்கால விடுமுறை காலம் பள்ளி விடுமுறைகளுடன் ஒத்துப்போகிறது. இதனால் சுற்றுலா செல்வது அதிகரிக்கும். இந்த சூழலில் மாணவர்கள் தங்கள் விடுமுறை காலத்தை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அனுபவிக்க வேண்டும் என்றாலும், தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்ற நாங்கள் அழைக்கிறோம் என்றார்

சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட விதிகளை பின்பற்றவும், மேலும் வயதானவர்களுடன் பழகுவதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.