UAE Tamil Web

கோவிட்-19 தடுப்பூசி போட்டு கொண்டாலும் இதில் அலட்சியம் காட்டாதீங்க.! அமீரக மருத்துவர்கள் கூறிய பகீர் தகவல்..

injection

சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசி அமீரகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், முதல் டோஸை குடியிருப்பாளர்கள் ஆர்வமுடன் பதிவு செய்து வரிசையில் நின்று காத்திருந்து செலுத்தி கொள்கின்றனர்.

தொற்றுக்கு எதிரான கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மக்கள் வழக்கம் போல பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டுமா என்ற சந்தேகம் எழுவது இயல்பு. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமீரக மருத்துவர்கள், தடுப்பூசி போட்டு கொண்டாலும் குடியிருப்பாளர்கள் தொடர்ந்து முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

ஏன்.?

தடுப்பூசி போட்டு கொண்ட ஒருவரிடமிருந்து தடுப்பூசி போடாத ஒருவருக்கு வைரஸ் தொற்று பரவுவதற்கான ஆபத்து இன்னும் உள்ளதே இதற்கு காரணம். தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை தொற்றிலிருந்து பாதுகாக்க, தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். துபாயில் உள்ள பிரைம் மருத்துவமனையின் உள் மருத்துவ ஆலோசகரும், மருத்துவத் தலைவருமான அப்தல்லா கூறுகையில், தடுப்பூசி போட்டு கொண்ட ஒருவர் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதையோ அல்லது அறிகுறியற்றவராக இருப்பதையோ தடுக்க வாய்ப்பில்லை.

பரவும் வாய்ப்பு.!

கோவிட்-19 தடுப்பூசி போட்டு கொண்ட ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டால், அது லேசானதாக இருக்கும், மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவிற்கு உடல்நலம் பாதிப்படையாது. இதுபோன்ற சூழலில் தடுப்பூசி செலுத்தி கொண்ட ஒரு நபர் ஊசி போட்டு கொள்ளாத நபர்களுக்கு தொற்று பாதிப்பை ஏற்படுத்தி விட வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை, மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் தடுப்பு மருந்தை செலுத்தி கொண்ட பிறகு வேண்டுமானால் முககவசங்களின் பயன்பாட்டை நிறுத்தி கொள்ளலாம். அதுவரை சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது உள்ளிட்டவற்றை பின்பற்றுவது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி 100% பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்காது என்றும் மருத்துவர்கள் கருதுகின்றனர். சினோஃபார்ம் தடுப்பூசி 86% செயல்திறன் கொண்டுள்ளதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். தடுப்பூசி தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து தெளிவான முடிவுக்கு வர இயலவில்லை என்று மருத்துவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆக மொத்தம் தடுப்பூசி போட்டு கொண்டாலும் பொதுநலம் காக்க வழக்கம் போல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம் என்றே மருத்துவர்களின் கூற்றுகள் உறுதி செய்கின்றன.

injection
0 Shares
Share via
Copy link