UAE Tamil Web

அமீரகத்தில் கோவிட்-19 தடுப்பூசியை நீங்கள் எங்கெல்லாம் போட்டு கொள்ளலாம்.? வெளியான மையங்களின் பட்டியல்..

vaccine

சீன நிறுவனமான சினோஃபார்ம் நிறுவனத்தின் கோவிட் -19 தடுப்பூசியை இப்போது பதிவு செய்வதன் மூலம் பயன்படுத்த அமீரகத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பல சுகாதார மையங்கள் குடியிருப்பாளர்களுக்கு தடுப்பூசியை வழங்கும் பணியை துவக்கியுள்ளன.

சீன அரசின் சினோஃபார்ம்(Sinopharm) மருந்து நிறுவனம் உருவாக்வாக்கியுள்ள கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனையில் 86% செயல்திறன் மிக்கதாக இருந்ததாக அமீரகம் கூறியுள்ளது. இதனிடையே அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தால் (MoHAP) சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசியை பெற குடியிருப்பாளர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தடுப்பூசி தற்போது நாடு முழுவதும் கிடைக்கிறது என்பதை சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் கால் சென்டர் ஊழியர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக கலீஜ் டைம்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த தகவலின் படி தற்போது சீன நிறுவனத்தின் தடுப்பூசி அமீரகம் முழுவதுமுள்ள பின்வரும் மையங்களில் வழங்கப்படுகிறது.

அபுதாபி:

சேஹாவால் (SEHA) நிர்வகிக்கப்படும் அனைத்து மருத்துவ கிளினிக்குகளிலும் மற்றும் வி.பி.எஸ்(VPS) நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் சினோஃபார்ம் தடுப்பூசி போடப்படும்.

துபாய்:

துபாய் பூங்காக்கள் மற்றும் ரிசார்ட்ஸின் கள மருத்துவமனை(Field Hospital)

ஷார்ஜா:

மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வாசிட் மெடிக்கல் சென்டர், மற்றும் பிற மையங்கள்.

அஜ்மான்:

அல் ஹுமைதியா சென்டரில் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தடுப்பூசி கிடைக்கும்.

உம் அல் குவைன்:

அல் பைத் மெட்வாஹித் மற்றும் பல மையங்கள்.

புஜைரா:

முராஷிட் மெடிக்கல் சென்டர்(Murashied Medical Centre) மற்றும் பிற மையங்கள்.

தற்போதைக்கு கிடைத்துள்ள விவரங்களை இங்கே நாம் பதிவு செய்துள்ளோம். மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

vaccine
0 Shares
Share via
Copy link