UAE Tamil Web

3 மாதங்களில் 50% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்: அமீரக அரசின் மாஸ்டர் பிளான்..!

Corona injection

அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று ஊடகங்களுக்கு வெளியிட்ட தகவலின்படி அமீரக மக்கட்தொகையில் 8 சதவீத பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் இதுவரையில் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்துப் பேசிய அமீரக சுகாதாரத்துறையின் செய்தித் தொடர்பாளர் டாக்டர். ஃபரிதா அல் ஹோஸ்னானி,” இதுவரையில் 826,301 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு நாளைக்கு 47,000 டோஸ்கள் என்ற அளவுக்குச் சமம். இந்தாண்டின் முதற் காலாண்டில் அமீரக மக்கட்தொகையில் பாதிப்பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுவதே அரசின் நோக்கமாகும். இதன்மூலம் நோய்த்தாக்குதலுக்கு குறிப்பாக தீவிரமாக பாதிக்கப்படுபவர்களைக் காக்க முடியும். அடுத்த நிலையில் நோயைக் கட்டுப்படுத்த இந்தத் தடுப்பூசித் திட்டம் உதவும்”

“நிறுவனங்களில் பின்பற்றப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்வதன் மூலமும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சமூக மக்களின் உறுதிப்பாட்டை அதிகரிப்பதன் மூலமும் அடுத்தகட்டத்தில் நோயப்பரவலைத் தடுப்பதே எங்களது லட்சியம்” என்றார்.

சமுதாயத்தின் அதிகமான மக்களுக்கு தடுப்பூசியை வழங்குவதன் காரணமாக மக்கள் நோயெதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள். ஆகவே, அதன்வழியாக நோய்ப்பரவலை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என ஹோஸ்னானி குறிப்பிட்டார்.

எளிதில் நோய்த்தாக்குதலுக்கு உட்பட வாய்ப்பிருப்பவர்கள், வயசாளிகள், நீண்ட நாள் வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி வழங்குவதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதுகுறித்துப் பேசுகையில்,”பாதுகாப்பு கருதியே அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் முதியவர்களுக்கு இந்தத் தடுப்பூசி 100 சதவீத பாதுகாப்பையும் நோய்த்தடுப்பு ஆற்றலையும் அளிக்கவல்லது. ஆகவே அனைத்து விதமான வயதினைரைக்கொண்ட மக்களும் இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்” என ஹோஸ்னானி தெரிவித்தார்.

Corona injection
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap