UAE Tamil Web

தினசரி அதிகளவு டோஸ்கள் கொரோனா தடுப்பூசி வழங்கும் நாடுகள்: அமீரகம் முதலிடம்..!

Long-manufacturing-timeline-hampers-annual-flu-vaccine-strain-selection-experts-say

தினசரி அதிகளவு கொரோனா தடுப்பூசி வழங்கும் நாடுகளின் பட்டியலில் அமீரகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 7 நாட்களில் அமீரகத்தில் தினசரி 100 பேருக்கு 1.16 டோஸ்கள் என்ற வீதத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவருகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் அமீரகம் 100 பேருக்கு 20.8 டோஸ்களைக் கையாள்கிறது. இதனடிப்படையில் பார்த்தால் அமீரகம் உலகளவில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. முதலிடத்தில் இஸ்ரேல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி எளிதில் கிடைக்கும் நாடுகளின் பட்டியலில் அமீரகம் 5 ஆம் இடம் பிடித்துள்ளது. அமெரிக்கா, கனடா, ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் இஸ்ரேல் ஆகியவை முறையே முதல் நான்கு இடங்களில் உள்ளன.

ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை வரையில் அமீரகம் 2.06 மில்லியன் டோஸ்களை கையாண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாராந்திர கொரோனா குறித்த விளக்கக் கூட்டத்தில் தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர். சைஃப் அல் தஹேரி பேசுகையில்,” இந்த இலவச தடுப்பூசித்திட்டம் அரசின் மிக முக்கியமான திட்டங்களுள் ஒன்று. அனைத்து மக்களும் அருகில் உள்ள சுகாதார நிலையங்களில் இலவச கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுமாறு அழைப்புவிடுக்கிறோம். இதன்மூலம் நமது இலக்குகளை குறைவான நேரத்தில் நாம் அடைய முடியும். கொரோனாவிலிருந்து வெளியேற தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி” என்றார்.

Long-manufacturing-timeline-hampers-annual-flu-vaccine-strain-selection-experts-say
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap