அமீரகத்தின் கோல்டன் விசாவை பெறுகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.! அப்படியென்றால் என்ன.?

ronaldo

கால்பந்து ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்தமான நபர்களின் பட்டியலில் நிச்சயமாக இருப்பவர், ஜுவென்டஸுக்காக விளையாடும் போர்த்துகீசிய நாட்டை சேர்ந்த வீரர்  கிறிஸ்டியானோ ரொனால்டோ. தனது கடின உழைப்பாலும், தளராத முயற்சியாலும் தனெக்கென ஒரு இடத்தை இந்த உலக மக்களின் இதயத்தில் பிடித்தவர் என்றால் அது மிகையாகாது. அவர் படைத்த சாதனைகளுக்கு எல்லைகளே இல்லை என்று கூட சொல்லலாம்.

தற்போது அந்த சர்வதேச கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கும் மேலும் ஆறு கால்பந்து வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுடன் ஐக்கிய அரபு அமீரக கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

கோல்டன் விசா என்றால் என்ன?

குறிப்பாக செல்வந்தர்களை ஈர்க்க வடிவமைக்கப்பட்டுள்ள விசா தான் இந்த கோல்டன் விசா. இந்த விசாவை பெற்றவர்களுக்கு (5 ஆண்டு மற்றும் 10 ஆண்டு விசா) முழுமையான செல்லுபடியாகும் வதிவிட அனுமதி வழங்கப்படும் (Fully Valid residency permit). அதற்கு பதிலாக விசா வழங்கிய நாட்டின் பொருளாதாரத்தை ஆதரிக்கும் வகையில், இந்த நபர்கள் நாட்டில் கணிசமான முதலீடு செய்ய வேண்டும்.

இதன் அடிப்படையில், உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, உலகெங்கிலும் உள்ள சர்வதேச வீரர்களுடன் இணைவதற்கான துபாய் விளையாட்டு கவுன்சில் முன்முயற்சியாக இந்த வீரர்கள் கோல்டன் விசாவைப் பெற்றுள்ளனர். மேலும் அவர்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழவும் முதலீடு செய்யவும் ஊக்குவிக்கின்றனர்.

 

View this post on Instagram

 

. تقدم #البرتغالي #كريستيانـو_رونالدو لاعب #يوفنتوس الإيطالي، نجوم الرياضة الحاصلين على #الإقامة_الذهبية في #الإمارات، وذلك في إطار تطبيق قرار #مجلس_الوزراء، الخاص بمنح حزمة من #التأشيرات طويلة الأمد، وتأكيداً على مكانة الدولة، كحاضنة للمواهب والمبدعين والعلماء ورواد الأعمال. وكان صاحب السمو الشيخ #محمد_بن_راشد آل مكتوم نائب رئيس الدولة رئيس مجلس الوزراء حاكم #دبي، رعاه الله، اعتمد في مايو الماضي، نظام #الإقامة الدائمة «البطاقة الذهبية» للمستثمرين، ورواد الأعمال، وأصحاب المواهب التخصصية، والباحثين في مجالات العلوم والمعرفة، بهدف تسهيل مزاولة #الأعمال، وخلق بيئة استثمارية جاذبة ومشجعة على نمو ونجاح الأعمال للمستثمرين ورجال الأعمال والموهوبين. وذلك بهدف خلق بيئة مشجعة على #الاستثمار والإبداع، وترسيخ منظومة تنموية تتميز بالاستقرار، وإشراك أصحاب المواهب الاستثنائية، ليكونوا شركاء دائمين في مسيرة التنمية في الدولة. . #الإمارات #رؤية_الإمارات #عين_في_كل_مكان

A post shared by رؤية الإمارات Emirates Vision (@evisionmn) on

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான உயர்திரு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை, நாட்டில் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு இந்த கோல்டன் விசாவை வழங்க ஒப்புதல் அளித்தது.

அதுமட்டுமல்லாமல், அமைச்சரவை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில், முக்கிய சாதனைகளை நிகழ்த்தும் அனைத்து உறுதியான விளையாட்டு வீரர்களுக்கும் இந்த கோல்டன் விசா கிடைக்கும். அத்துடன் இந்த துறையில் முன்னணி பதவிகளையும் குறிப்பிட்ட நபர்கள் பெற முடியும் என்று தெரிவித்துள்ளது.

Loading...