UAE Tamil Web

துபாயில் தல தோனி – சி.எஸ்.கேவும் வந்தாச்சு!

கொரோனா பரவல் காரணமாக 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் தற்போது எஞ்சிய போட்டிகள் அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் போட்டிக்கான கால அட்டவணையும் வெளியாயின. அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் துபாயில் மோதுகின்றன. இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்துதல் கருதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஆளாக தனி விமானம் மூலம் துபாய் வந்து இறங்கியுள்ளது. கேப்டன் கூல் எம்.எஸ்.தோனியும் குடும்பத்துடன் துபாய் வந்தடைந்தார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை சென்னை அணி வெளியிட்டுள்ளது.

Image
Credit : CSK

இதேபோல எம்.எஸ்.தோனி ஓட்டலில் ஸ்டைலாக பில்லியர்ட்ஸ் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள வீரர்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு பயிற்சியை தொடங்க உள்ளனர். அமீரகத்தில் நடைபெறும் இந்த ஐபிஎல் ஆட்டத்தில் 4வது முறையாக கோப்பையை வெல்ல சி.எஸ்.கே. முனைப்பு காட்டி வருகிறது.

0 Shares
Share via
Copy link