UAE Tamil Web

இன்று முதல் கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர்கள் மூடல்.!

சனிக்கிழமை முதல் துபாயில் 24 மணிநேரமும் சுத்திகரிப்பு பணிகள் நீட்டிப்பு.

துபாய் நகராட்சி மற்றும் ஏனைய சேவை வழங்குபவர்களுடன் இணைந்து செயற்படுத்தும் கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர்கள் (Customer Happiness Centers) மறு அறிவித்தல் வரும் வரை, இன்று ஞாயிற்றுக்கிழமை (05.05.2020) முதல்  தற்காலிகமாக மூடப்படும் என சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.

துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உயர்மட்டக் குழு (Supreme Committee of Crisis and Disaster Management ) மறுமதிப்பீட்டுக்கு உட்படக்கூடிய வகையில், சனிக்கிழமை இரவு முதல், அடுத்து வரும் இரண்டு வார காலத்திற்கு நாளொன்றுக்கு 24 மணிநேரமும் தொடர்ச்சியாக சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்த முடிவை அடுத்தே அனைத்து கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர்களும் மூடப்படுவதாக தெரிவித்துள்ளது.

மேலும், வாடிக்கையாளர்கள் இந்த காலகட்டத்தில் ஆன்லைன் ஊடாக தமது பரிவர்த்தனைகளை (transactions) மேற்கொள்ளுமாறு சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

ஸ்மார்ட் மாற்றத்தின் (smart transformation) மூலம் துபாய் அடைந்த முன்னேற்றமானது, வலுவான உட்கட்டமைப்பை நிறுவ அனுமதித்துள்ளதுடன் அதன் வாயிலாக அரசு சேவைகளை செயற்திறன் மற்றும் நம்பகத்தன்மையுடன் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பையும் அமீரகவாசிகளுக்கு அளித்துள்ளது.

கோவிட்-19 ற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து பங்குதாரர்களுக்கிடையிலும் வலுவான ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும் என RTA மேலும் தெரிவித்தது.

Source: Khaleej Times



error: Alert: Content is protected !!