UAE Tamil Web

புஜைராவிலிருந்து 250 கிமீ தூரத்தில் ஷஹீன் புயல் ; மணிக்கு 140 கிமீ வேகத்தில் காற்று வீசலாம் என எச்சரிக்கும் NCM..!

WATER

வெப்பமண்டல புயலான ஷஹீனின் மையப்பகுதி வடமேற்கு ஓமான் கடல் பகுதியில் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அரபிக்கடலில் மணிக்கு 120 – 140 வேகத்தில் காற்று வீசலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷஹீன் புயலானது புஜைராவிலிருந்து 250 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதாகவும் அது மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்வதாகவும் NCM வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமீரகத்தின் கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு மற்றும் அல் அய்ன் ஆகிய பகுதிகளில் இன்று மற்றும் நாளை மழை பொழியலாம். ஆகவே, திடீர் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் மலைப்பகுதிகள், பள்ளத்தாக்குகள் மற்றும் தாழ்வான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மக்களை NCM எச்சரித்துள்ளது.

ஓமான் கடல் கடுமையான சீற்றத்துடன் இருக்கும் என்பதால் அமீரகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள தாழ் நிலங்களில் தண்ணீரின் அளவு அதிகரிக்கலாம் என NCM தெரிவித்துள்ளது. அரேபிய வளைகுடாவின் வட பகுதியில் கடல் அவ்வப்போது சீற்றம் கொள்ளும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

WATER
7 Shares
Share via
Copy link