UAE Tamil Web

தொழிலாளர்களுக்கு ஒன்னும் ஆகக்கூடாது; தேவைப்பட்டா வேலையை நிறுத்துங்க – ஷஹீன் புயலை முன்னிட்டு கம்பெனிகளுக்கு உத்தரவிட்ட அமீரக அரசு..!

beach

ஷஹீன் புயல் காரணமாக இன்று (அக்டோபர் 3) முதல் நாளை மறுநாள் (அக்டோபர் 5) வரை அமீரகத்தில் கடுமையான வானிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமீரகத்தில் உள்ள நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளுக்கு அமீரக மனிதவள மேம்பாடு மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது.

அதில், தொழிலாளர்களின் நலன், பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு தேவைப்படும்பட்சத்தில் வேலையை நிறுத்தலாம் எனச் சுட்டப்பட்டுள்ளது.

ஷஹீன் புயலை முன்னிட்டு அமீரகம் முழுவதிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹட்டாவில் உள்ள பள்ளிகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

போலவே, மக்கள் கடற்கரைகள், தாழ்வான பகுதிகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு செல்ல வேண்டாம் என அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிந்திருந்தது நினைவிருக்கலாம்.

beach
6 Shares
Share via
Copy link