UAE Tamil Web

முக்கியச் செய்தி: அமீரகத்தில் விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் : மிக மிக கவனமாக இருக்கும்படி அரசு எச்சரிக்கை..!

Rough Sea

ஷாஹீன் புயல் ஓமானை நெருங்குவதால் அமீரகத்தின் கிழக்குப் பகுதியில் வசிப்பவர்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 5.25 முதல் நாளை மாலை 5.25 மணி வரையில் ஓமான் கடலில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்றானது வீசும் என NCM எச்சரித்துள்ளது. இந்த கடுங்காற்றின் காரணமாக கடலலைகள் 10 அடி வரையில் உயரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கிழக்குப் பகுதியில் வசிப்பவர்கள் மிக மிக கவனத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Rough Sea
5 Shares
Share via
Copy link