35.4 C
Dubai
May 25, 2020
UAE Tamil Web

கிணற்றில் தவறி விழுந்து இறந்த 10 மாதக் குழந்தை – இந்தியா திரும்ப அமீரகத்தில் காத்திருக்கும் தந்தை!

indian-baby-drowns,-expat,-uae,-dubai,-abu-dhabi,-coronavirus,-covid19.

கேரளாவைச் சேர்ந்த சுபின் ராஜன் (37) அமீரகத்தில் விற்பனை நிர்வாகியாகப் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான கொல்லத்தில் தன்னுடைய 10 மாதக் குழந்தை இறந்ததை அடுத்து தன் தாயுடன் (57) வந்தே பாரத் மிஷன் மூலம் இயக்கப்படும் சிறப்பு விமானங்கள் வாயிலாக இந்தியா திரும்ப கடுமையாக முயற்சித்துவருகிறார் ராஜன்.

ராஜனின் இளைய மகளான அனஸ்வரா சுபின் கேரளாவில் உள்ள அவர்களது வீட்டிலிருக்கும் கிணற்றில் மார்ச் 25 அன்று தவறி விழுந்து இறந்து போனார். துரதிருஷ்டவசமாக அதற்கு முந்தைய நாளே (மார்ச் 24) கொரோனா காரணமாக இந்தியாவில் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவிட்டதால் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதன்காரணமாக ராஜனால் அமீரகத்திலிருந்து கேரளா திரும்ப இயலவில்லை.

“அனைத்து விமானப் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டதால் நானும் எனது தாயும் எத்தனை முயற்சித்தும் எங்களால் இந்தியா திரும்ப முடியவில்லை. சிறப்பு விமானங்கள் சேவையில் நம்பிக்கை இருந்தது எனக்கு. ஆனால் என்னுடைய கோரிக்கைகளுக்கு யாரும் செவிசாய்க்கவில்லை”  என்றார் ராஜன்.

மனச்சோர்வு

மார்ச் மாத துவக்கத்தில் குழந்தைகளோடு கேரளா திரும்பிய ராஜனின் மனைவி ஷில்பா கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திகொண்டார். அப்போதுதான் இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து ராஜன்” எனது மனைவிக்கு மனச்சோர்வு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்குரிய மருந்துகளை அவர் எடுத்துவருகிறார்.” என்றார்.

“நீர் நிறைந்திருந்த கிணற்றினை கிரில் தடுப்பால் அடைக்கும்போது குழந்தை தவறி கிணற்றுக்குள் விழுந்திருக்கிறது. வீட்டில் மனைவி, குழந்தைகள் மற்றும் எனது மாமியார் மட்டுமே இருந்திருக்கின்றனர். ஊரடங்கு காலம் என்பதால் குழந்தையை மீட்க மக்கள் வரத் தாமதம் ஆகிவிட்டது” என்றார் ராஜன்.

குழந்தையின் மரணம் நிகழ்ந்ததிலிருந்து, ஷில்பாவின் மனச்சோர்வு தீவிரமடைந்ததால் அவர் தற்போது மனநல சிகிச்சை மற்றும் மருத்துவ உதவி தேவைப்படும் நிலையில் இருக்கிறார். இதுகுறித்து ராஜன் பேசுகையில்,” எனது மனைவி, குழந்தை மற்றும் எனது வயதான தந்தை (67) என் வருகைக்காக காத்திருக்கின்றனர். என்னுடைய குடும்பத்துடன் நான் இருக்கவேண்டும். உடனடியாக நான் வீட்டிற்குத் திரும்ப வேண்டும்” என்றார்.

மூன்று நாட்களுக்கு முன்னதாக துபாயிலிருக்கும் இந்தியத் துணைத் தூதரக தலைமை அதிகாரி, ராஜன் குறித்த விபரங்களை மின்னஞ்சல் வாயிலாகப் பெற்றார். ராஜனின் பயணத்தேதி பற்றிய அறிவிப்பிற்காக அவருடைய குடும்பம் காத்திருக்கிறது. “துணைத் தூதரகத்திலிருந்து அழைத்த அதிகாரிகள் என்னுடைய மகளின் இறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி கேட்டார்கள். எங்களால் இந்த சூழ்நிலையில் எதையும் விண்ணப்பிக்க முடியவில்லை” என்றார் ராஜன்.

இந்த சோகங்களின் தொடர்ச்சியாக ராஜனுக்கு சம்பளமில்லா விடுப்பு அளித்திருக்கிறது அவர் பணியாற்றும் நிறுவனம்.” நான் இரண்டு மாதங்களாக வேலையில்லாமல் வீட்டிலேயே இருக்கிறேன். இது ஒரு கெட்ட கனவினைப்போன்று இருக்கிறது. கேரளாவின் எந்த மாவட்டத்திலும் நான் தரையிறங்கத் தயாராக இருக்கிறேன்” என ராஜன் தெரிவித்தார்.

இந்தியாவின் மீட்பு நடவடிக்கைக்கான இணையதளத்தில் அவசரமாக நாடு திரும்ப வேண்டி ராஜன் விண்ணப்பித்திருக்கிறார். மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மக்களுக்கான நல அமைப்பான Norka விலும் ராஜன் விண்ணப்பித்திருக்கிறார்.

இந்திய அரசின் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் முதல் பகுதியில் 3000 இந்தியர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இந்தியா திரும்பினர். திட்டத்தின் இரண்டாம் பகுதியில் ஏர் இந்தியா நிறுவனம் 25 விமானங்களை கேரளாவிற்கு இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற சில பதிவுகள்