21.7 C
Dubai
October 30, 2020
UAE Tamil Web

இந்தியாவைச் சேர்ந்த பிரபல அமீரக தொழிலதிபர் மரணத்தில் திடீர் திருப்பம்..!

Joy Arakkal

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல அமீரக தொழிலதிபர் ‘ஜாய் அரக்கல்’ கடந்த வாரம் வியாழக்கிழமையன்று துபாயில் மரணமடைந்தார். இதுகுறித்து நாம் முன்னரே பதிவிட்டிருந்தோம். இச்சம்பவம் குறித்து விசாரணை செய்த துபாய் காவல்துறை அவர் தற்கொலை செய்து கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஏப்ரல் 23 ஆம் தேதி பிசினஸ் பேவில் உள்ள ஒரு கட்டிடத்தின் 14 வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பர் துபாய் காவல் நிலைய இயக்குனர் பிரிகேடியர் அப்துல்லா காதிம் பின் சோரூர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, “இது தற்கொலை மரணமாகும். விசாரணைகள் முடிந்துவிட்டது(case closed). அவரது உடல் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இறுதியாக அதிகாரி கூறும்போது, தொழிலதிபர் ஜாய் அரக்கல் அவரது நண்பர் மற்றும் அவரது மகனுடன் இருந்த போது, புகைபிடிப்பதாக கூறி வெளியே சென்றுள்ளார். அதன்பின் அவர் தற்கொலை செய்துள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் எங்களுக்குத் தெரிவித்தனர்” என்று அவர் கூறினார்.

ஜாய் அரக்கல் பணப்பிரச்சனை காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியுடன் ஜாய் அரக்கலின் உடல் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடுக்கு கொண்டு செல்லப்படும் என்று துபாய் மற்றும் இந்தியா இடையிலான துணைத் தூதர் விபுல் உறுதிப்படுத்தினார். இறந்த தொழிலதிபர் அரக்கலின் உடலுடன் அவரது மனைவி செலின் மற்றும் குழந்தைகள் விமானத்தில் உடன் செல்லுகின்றனர்.

Source: Khaleej Times



error: Alert: Content is protected !!